💜34💜

2.2K 112 33
                                    

"தாரா, வாயைத் தொடக்சுக்கோ. ரொம்ப வழியிது. என்னடி இப்படி வழியற ரிதீவைப் பார்த்து?..." என்று தாராவை நக்கலாகப் பேசினான் அர்ஜுன்.

"நீ வழிஞ்சத விடவா? எப்போவும் லொடலொட'னு பேசுவ. இன்னைக்கு அவளைப் பார்த்து அப்படியே கப்சிப்'னு வாயடைச்சுப் போயி நின்னையே.." என்று அவனுக்குப் பதிலடித் தந்தாள் தாரா.

"பின்ன... நிக்கோலா டி. என் கனவு கன்னி டி. உன்னை மாதிரி சுமாரானப் பொண்ணு இல்லை அவ. அதுவும் எனக்குக் கை குடுத்தா. இன்னைக்கு நாள் முழுக்க நான் கை கழுவ மாட்டேன்." என்று முப்பத்தி ரெண்டு பல்லையும் காட்டினான்.

"யாக்!" என்று முகத்தை சுளித்த தாரா.. "அதே மாதிரி தான். அது ஹாண்ட்சம் கிங் ரதீவ். உன்ன மாதிரி மொக்கப் பையன் கிடையாது." என்று ஓரக்கண்ணால் அர்ஜுனைப் பார்த்தாள் தாரா.

"ஹோ! நான் மொக்கப் பையனா?" என்று தாராவின் காதைப் பிடித்து திருகினான் அர்ஜுன்.

"டேய்! லூசு. காதை விடு டா." என்று அவன் கைகளைப் பிடித்து தள்ளிவிட்டாள் தாரா.

"ஆனா, நான் சுத்தமா எதிர்ப் பார்க்கவே இல்லை தாரா. இவ்வளவு பெரிய ஸ்டார் ஹீரோ ரிதீவ். இவ்வளவு எதார்த்தமாக பேசுவாரு னு. அந்த பொண்ணு நிக்கோலாவும் செம்ம சுவீட்டான கேரக்டர்." என்றான் அர்ஜுன்.

"உண்மை தான். அந்த எதார்த்தத்தினால  தான் அவங்க ரெண்டுப் பேரும், எல்லாருக்கும் பிடிச்ச ஸ்டாரா இருக்காங்க." என்று கண்களை சிமிட்டினாள் தாரா.

இவர்கள் பேசுவதை, புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்... சிறுவர்கள் இருவரும்.

சிறிது நேர அமைதியை உடைத்த தாரா...

"நானும் இந்த மாதிரி ஒரு பிரபலம் ஆகிருக்க வேண்டியது. ஜஸ்ட் மிஸ். டாக்டர் ஆகிட்டேன். பட், எனக்கு இந்த மருத்துவத் தொழில் தான் ரொம்பப் பிடிச்சு இருக்கு. இதுலையும் பிரபலம் ஆகலாம். ஆகாமலும் போகலாம்." என்று சமந்தம் இல்லாமல் பேசினாள் தாரா.

இவள் பேசுவதைக் கேட்டு குழப்பமாக விழித்த அர்ஜுன்... "தாரா, இப்படியே நீ பேசிட்டு இருந்தா நாளைக்கு நமக்கு பிறக்கப் போற குழந்தைக் கூட உன்ன மதிக்காது." என்று கேப்பில் கிடா வெட்டின்னான்.

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now