💙25💙

2.3K 122 29
                                    


"தாரா பேபி, இன்னைக்கு நீ என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது டி. உன்ன நான் விட மாட்டேன்." என்று தாராவின் இடையைபபிடித்து மெத்தையில் தள்ளினான் அர்ஜுன்.

அவள் இரு கைகளையும் பிடித்தவன், அவள் இதழ் நோக்கி, தன் இதழ் கொண்டு வந்தான்.

"அர்ஜுன்! அர்ஜுன்! பிளீஸ்..." என்று சத்தமாக கத்திய தாராவின் முகத்தில் அறை கப் தண்ணீரை ஊற்றினான் அவன்.

பதறி அடித்துக்கொண்டு தூக்கத்திலிருந்து விழித்தாள் தாரா.

"என்னடி, கனவுல என் பேரை சொல்லி கத்திட்டு இருந்த? எதாவது நல்ல ரொமான்டிக் கனவா? எதுனாலும் சொல்லு, இன்னைக்கு நைட் நிறைவேற்றிவிடலாம்." என்று தன் கீழ் உதட்டை கடித்துக்கொண்டு சொன்னான் அர்ஜுன்.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல. உன்ன கீழப்போட்டு மிதிக்கற மாதிரி கனவு கண்டேன். வேணும்னா உன்ன மீதிச்சு காமிக்கவா? என்று கண்கள் விரிய சொன்ன தாராவை...

"வேணாம் தாயே! நான் அம்மாவ பார்க்க கீழப்போறேன். உன் அன்பிற்குரிய மைதிலி அத்தை நம்ம ரெண்டு பேரையும் உடனே வரச்சொல்லி கூப்ட்டாங்க." என்று அவன் கூறியதும், மெத்தையில் இருந்து எழுந்தவள், வேகமாக முகத்தை துடைத்து விட்டு அர்ஜுனுடன் கீழே வந்தாள்.

அவள் படியில் இருங்கி வர வர, ஹாலில் அமர்ந்து இருந்த அந்த வீட்டின் இளவட்டங்கள் அனைவரும் ஒருவர் காதில் இன்னொருவர் பேசி, தாராவை பார்த்து புன்னகை செய்தனர்.

தாராவிற்கோ குழப்பம்... 'எதுக்கு எல்லாரும் நம்மள இப்படி பார்க்கறாங்க?' என்று சந்தேகத்துடன் கீழே வந்து சோபாவில் அமர்ந்தாள்.

கீழே வந்த அர்ஜுனை குனிய வைத்து கும்மினார்கள்... அர்ஜூனின் அண்ணா ரஞ்சித், அண்ணி அனிதா, அக்கா ரஞ்சிதா, மாமா கோபி, ரம்யா, ரம்யாவின் கணவர்  ஆனந்த், நிதீஷ் மற்றும் ஐஸ்.

"அய்யோ!!! அண்ணா, அக்கா, அண்ணி, ரம்யா... எதுக்கு எல்லாரும் சேர்ந்து என்ன இப்படி அடிக்கறீங்க?" என்று அடியைக் கைகளால் தடுத்துக்கொண்டு கத்தினான் அர்ஜுன்.

காதலும் கடந்து போகும்💘حيث تعيش القصص. اكتشف الآن