கண்டேன் என் ஜீவாமிர்தம்✔

By Vaishu1986

214K 9.9K 3K

பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நா... More

💟 ஜீவாமிர்தம் 1
💟 ஜீவாமிர்தம் 2
💟 ஜீவாமிர்தம் 3
💟 ஜீவாமிர்தம் 4
💟 ஜீவாமிர்தம் 5
💟 ஜீவாமிர்தம் 6
💟 ஜீவாமிர்தம் 7
💟 ஜீவாமிர்தம் 8
💟 ஜீவாமிர்தம் 9
💟 ஜீவாமிர்தம் 10
💟 ஜீவாமிர்தம் 11
💟 ஜீவாமிர்தம் 12
💟 ஜீவாமிர்தம் 13
💟 ஜீவாமிர்தம் 14
💟 ஜீவாமிர்தம் 15
💟 ஜீவாமிர்தம் 16
💟 ஜீவாமிர்தம் 17
💟 ஜீவாமிர்தம் 18
💟 ஜீவாமிர்தம் 19
💟 ஜீவாமிர்தம் 20
💟 ஜீவாமிர்தம் 21
💟 ஜீவாமிர்தம் 22
💟 ஜீவாமிர்தம் 23
💟 ஜீவாமிர்தம் 24
💟 ஜீவாமிர்தம் 25
💟 ஜீவாமிர்தம் 26
💟 ஜீவாமிர்தம் 27
💟 ஜீவாமிர்தம் 28
💟 ஜீவாமிர்தம் 29
💟 ஜீவாமிர்தம் 30
💟 ஜீவாமிர்தம் 31
💟 ஜீவாமிர்தம் 32
💟 ஜீவாமிர்தம் 33
💟 ஜீவாமிர்தம் 34
💟 ஜீவாமிர்தம் 35
💟 ஜீவாமிர்தம் 36
💟 ஜீவாமிர்தம் 37
💟 ஜீவாமிர்தம் 38
💟 ஜீவாமிர்தம் 39
💟 ஜீவாமிர்தம் 40
💟 ஜீவாமிர்தம் 41
💟 ஜீவாமிர்தம் 42
💟 ஜீவாமிர்தம் 43
💟 ஜீவாமிர்தம் 44
💟 ஜீவாமிர்தம் 45
💟 ஜீவாமிர்தம் 47
💟 ஜீவாமிர்தம் 48
💟 ஜீவாமிர்தம் 49
💟 ஜீவாமிர்தம் 50
💟 ஜீவாமிர்தம் 51
💟 ஜீவாமிர்தம் 52
💟 ஜீவாமிர்தம் 53
💟 ஜீவாமிர்தம் 54
💟 ஜீவாமிர்தம் 55
💟 ஜீவாமிர்தம் 56
💟 ஜீவாமிர்தம் 57
💟 ஜீவாமிர்தம் 58
💟 ஜீவாமிர்தம் 59
💟 ஜீவாமிர்தம் 60
💟 ஜீவாமிர்தம் 61
💟 ஜீவாமிர்தம் 62
💟 ஜீவாமிர்தம் 63
💟 ஜீவாமிர்தம் 64
💟 ஜீவாமிர்தம் 65
💟 ஜீவாமிர்தம் 66
💟 ஜீவாமிர்தம் 67
💟 ஜீவாமிர்தம் 68
💟 ஜீவாமிர்தம் 69
💟 ஜீவாமிர்தம் 70
💟 ஜீவாமிர்தம் 71
💟 ஜீவாமிர்தம் 72
💟 ஜீவாமிர்தம் 73
💟 ஜீவாமிர்தம் 74
💟 ஜீவாமிர்தம் 75

💟 ஜீவாமிர்தம் 46

2.4K 153 58
By Vaishu1986

இருபது நாட்கள் இயல்பான வேகத்தில் கடந்திருந்தன. ஆனால் ஒவ்வொருவர் மனநிலையிலும் நாட்கள் மிக
வேகமாகவும், மிக மெதுவாகவும் கடந்ததாக எண்ணம் இருந்தது. நாளை அதிகாலையில் இனியா இசக்கிராசுவின் திருமணம் நடக்கவிருந்தது, நான்கு நாட்கள் கழித்து இருக்கும் ஒரு முஹூர்த்தத்தில் பவின் ஷைலஜா திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர். திருமணத்திற்கு தேவையான அழைப்பிதழ் விநியோகம், தன் இரண்டு தங்கைகளுக்கு தேவையான நகைகள், பட்டுப்புடவை, சீர்வரிசை பொருட்கள், இனியா ஷைலு விருப்பத்திற்கு ஏற்ப அவர்களது அறை மாற்றம், மாப்பிள்ளைகளைக்கு தேவையான உடைகள், அவர்களுக்கு மனைவியின் அண்ணன் என்ற முறையில் தான் செய்ய வேண்டிய செய்முறை அனைத்தையும் ஜெயந்தன், பத்மாவிடம் கேட்டு ஒற்றை ஆளாக சேகரித்து கொண்டு இருந்தான் ஜீவானந்தன்.

தன் அன்னையின் ஏக்கம் அறிந்து வானதியிடம் கேட்டு சபரீசன் ஸ்ரீமதியின் இருப்பிடம் அறிந்து ரிஷிகேஷத்திற்கு அலைபேசியில் பேசி தன் அன்னையின் மாமனை இனியா, ஷைலஜா கல்யாணத்துக்கு அழைத்து விட்டான். விழுப்புரத்தில் பரமேஸ்வரன் தாத்தாவின் வீட்டிலும் நவீனிடம் நேரடியாக சென்று அழைப்பு விடுத்திருந்தான், இதெல்லாம் தன் அன்னையும், தந்தையும் அவனிடம் சொல்லாத வேலை தான் என்றாலும் ஜீவாக்குட்டியிடம் பொறுப்பை விட்டால் அதை சிறப்பாக செய்து முடிப்பான் என்ற நம்பிக்கை அனைவர் மனதிலும் சிறு வயதிற்கு பின் மறுபடியும் வர வேண்டும் என்பதற்காகவும், தானே பொறுப்பெடுத்து செய்கிறோம் என்ற உற்சாகத்திலும் திட்டமிட்டு நாட்கள் பத்தாமல் வேலைகளை செய்து கொண்டு இருந்தான் அண்ணன்.

இதற்கிடையில் ஜெயந்தன், பத்மா, ஜெய்நந்தன், நிர்மலா, அர்ஜுன், மீரா, பலராம், கீதா அனைவரும் சேர்ந்து மாணிக்கத்தின் காரியத்தையும் மனநிறைவுடன் செய்து முடித்திருந்தனர். சிறியவர்கள் அனைவரும் ஒவ்வொரு வேலைகளில் மூழ்கி இருந்ததால் ஜெய் நந்தன் தன் மாணிக்கம் அண்ணாவின் காரியத்தை தன் பொறுப்பில் ஏற்று நடத்தி முடித்தார். கடைசி தருணத்தில் அவர் கூட இருந்து செய்ய வேண்டியதை செய்யவில்லை என்று உறுத்திக் கொண்டிருந்த மனம் சற்று சமனப்பட்டது அவருக்கு. 

சென்னையில் ஷைலஜா அண்ணனுக்கு எதிர்மாறான மனநிலையிலும் இவனிடமா போயும் போயும் உதவி கேட்டோம் என்ற எரிச்சலிலும் ஒவ்வொரு நாளையும் கழுத்தை பிடித்து நகர்த்தி கொண்டு இருந்தாள்.

ஷைலஜா அவனிடம் உதவி கேட்ட சரியாக நான்காவது நாள் மறுபடியும் மலைக்கு வந்து அவளை அவன் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டான் பவின். பாட விஷயத்தில் அவனுடைய அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. அவனது வீட்டை அடைந்து கௌதமனுக்கும், ராகினிக்கும் மரியாதை நிமித்தமாக ஒரு ஹலோ சொன்னதோடு சரி..... அதற்கு பின் எங்கு சென்றாலும் அவளது நிழல் போல் பவின் தான் அவளுடன் பாடப்புத்தகங்களை வைத்துக் கொண்டு ஒட்டிக் கொண்டே அலைந்தான்.

டேட்டா அனாலிஸிஸ், டேட்டா இன்டரப்டேஷன், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் இவை அனைத்தும் அவனது உதவியுடன் செவிவழி கல்வியாகவே ஷைலுவின் மூளைக்குள் பதிந்தன.

"பவின் உனக்கு வாய் வலிக்கலையா? உன் லெக்சரை கேட்டு கேட்டு எனக்கு தல வலிக்குது....... கொஞ்ச நேரம் ரெஸ்ட் விடேன் ப்ளீஸ்!" என்று சொல்லி அவள் குப்புறக் கவிழும் போதெல்லாம் பாதாம் மில்க்கோ, சூடான மிளகாய் பஜ்ஜியோ அவளுக்கு பிடித்த ஏதாவது ஒரு பதார்த்தம் தட்டில் இடம் பெற்றிருக்கும். சரியாக பத்து நிமிடங்கள் தான், இப்போ நீ ரிவைஸ் பண்ணு ஷைலு; கொஞ்சம் ஈஸியா இருக்கும்!" என்று சொல்லி அவனது அறையின் உள்ளே நுழைந்து விடுவான். 

"ஆஃபிஸ் போகலையா பவின்?" என்று கேட்கும் ஷைலுவிடம் சிரிப்புடன், "பத்து நாள் நான் லீவ் போட்டுருக்கேன்!" என்பான். "பத்து நாள் லீவா...... அதுவும் காரணமே இல்லாம?" என்று வியக்கும் ஷைலுவிடம் எரிச்சலை மறைக்க சிரமப்பட்டு,

"காரணமே இல்லாமயா...... நீ பாஸாகணும்னு ஒரு காரணம் இருக்கு, எப்பவும் அதை மனசுல வச்சிருந்தா நல்லது, தேவையில்லாம இப்படி உளறிட்டு இருக்கப் போறியா? இல்ல புக்கை தூக்குறியா!" என்று கேட்பவனிடம்,

"சில் பவின்...... ஈஸி!" என்று சொல்லி சமாதானம் செய்து விட்டு தன் படிப்பை தொடர்வாள் ஷைலஜா. இதையெல்லாம் தாண்டி பவினுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது ஷைலுவின் மொபைல் பேச்சுகள் தான்.

"சொல்லுடீ லட்டு!" என்று ஆரம்பித்தால் இரண்டு மணி நேரம் தொலைந்தது என்று பொருள். இரண்டு மூன்று நாட்கள் பொறுத்து பார்த்து விட்டு பவின் ஆனந்த ஸாகரத்தில் உள்ள அனைவரும் அவனது அலைபேசி வழியாக தான் ஷைலுவை கூப்பிட முடியும் என்று தெரிவித்து விட்டு அவளது அலைபேசியின் செறிவு அட்டையை கழற்றி வைத்து விட்டான்.

"பவின் என் செல் எங்க?" என்று கேட்டவளிடம் சிறு புன்னகையுடன் அலைபேசியை நீட்டி விட்டு அவன் ஓடினால் அறை வாயிலை தாண்டும் முன் "உள்ள இருந்த சிம் எங்கடா லூசு?" என்ற கேள்வியும் வரும்.

"ஒரு நாளைக்கு எல்லார் கூடயும்  பேசறதுக்கு உனக்கு 15 மினிட்ஸ் தான் டைம் ஷைலு. என் மொபைல்ல இருந்து கூப்பிட்டுக்கோ!" என்று சொல்லி விட்டு செல்பவனிடம், "யூ ஆர் அ டர்ட்டி ஹிப்போ ஐ ஹேட் யூ!" என்ற வசவும் கூட வரும். பவின் ஷைலுவிடம் தனது அறையை மொத்தமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து இருந்தான், அவனறையில் இருக்கும் ஒரு சில கபோர்டுகளை தொடக்கூடாது என்ற நிபந்தனையுடன்.

ஒரு நாள் ஆர்வம் தாங்காமல் அவனது கபோர்டை திறந்து பார்த்தவள் ஆச்சரியம் அடைந்தாள், அவளது கிரிக்கெட் பந்து அழகான ஒரு கோப்பையில் ஒரு தாங்கியில் நின்று கொண்டு இருந்தது. "கிப்ட் ஃப்ரம் மை லவ்லி ஷை!" என்ற வாசகத்துடன்.

"அடப்பாவி பந்தை எங்கிட்ட திருப்பி தரலைன்னு பார்த்தா அத ஒரு காதல் சின்னமாக்கி பத்திரமா வச்சுருக்கான்.... லூசுப்பையன்! இவன கொஞ்சம் கொஞ்சமா எனக்கு பிடிக்க ஆரம்பிச்சுடுச்சோ!" என்று அவளுக்குள்ளாகவே ஒரு கேள்வி கேட்ட ஷைலு கோப்பையை மறுபடியும் எடுத்த இடத்திலேயே வைத்து விட்டாள்.

"இன்னொரு ட்ராவையும் ஓப்பன் பண்ணக் கூடாதுன்னு சொன்னானே..... ஒரு வேள அதுல அவன் எக்ஸ் கேர்ள் ப்ரெண்டு விஷயம் ஏதாவது இருக்குமோ!" என்று யோசித்துக் கொண்டே அதையும் திறந்து பார்த்தவள் திகைத்துப் போய் விட்டாள்.

பவின் வேலை செய்யும் "வினு டையக்னோஸ்டிக்ஸ்" ன் அடையாள அட்டை, அவனது  விசிட்டிங் கார்டுகள், அவனது லேப் கோட் ஆகியவை பத்திரமான முறையில் பாதுகாக்கப் பட்டிருந்தன.

"நம்ம தல லேப் டெக்னீஷியனா... இவன் பேருல ஒரு லேப் நடத்துறான்னா இவன் எம்ப்ளாயி இல்ல எம்ப்ளாயரா தான் இருக்கணும். ச்சை ஹாஸ்பிட்டல் ஸ்மெல்லை இன்ஹேல் பண்ணினாலே நமக்கு இரிடேட் ஆகும். ஆனா என் பெஸ்ட்டீ ஒரு நர்ஸ், என் லவ்வர் ஒரு லேப் டெக்னீஷியன்...... என்ன கொடுமை ஷைலு!" என்று அவளுக்குள்ளாக வருந்தி கொண்டிருந்த ஷைலுவின் மனதிற்குள் அவளை அறியாமல் பவின் காதலன் எனும் இடம் பிடித்திருந்ததை அவள் உணரவில்லை.

"அங்கிள் அங்கிள் அங்கிள்.....!" என்று கத்திக் கொண்டே ஓடி வந்தவளை அவசரமாக பிடித்து நிறுத்திய ராகினி,
"என்ன மேடம் இன்னிக்கு உங்க வுட்பி வீட்ல இல்லாததனால ஒரே குஷி போல.... படிக்கிறதுக்கு எல்லாம் லீவா, சிலபஸ் கவர் பண்ணிட்டியா இன்னும் முடிக்கணுமாடா?" என்று கேட்டார்.

கௌதமன் ஷைலுவிடம் தன் இருக்கைக்கு பக்கத்தில் கை காட்டி அவளை அமரச் சொல்ல அவர் அருகில் அமர்ந்து கொண்டு ராகினியிடம்,

"ஆல்மோஸ்ட் எல்லாம் கவர் பண்ணியாச்சு ஆன்ட்டி! பவின் தான் என்னைய விட தரோவா இருப்பார்ன்னு நினைக்கிறேன். நான் படிக்கிறேன்னு சொல்லி அவரையும் டிஸ்டர்ப் பண்ணியாச்சு. கௌதம் அங்கிள் பவின்ட்ட சொல்லி நாளைக்கு ஒரே ஒரு நாள் மட்டும் எனக்கு லீவ் வாங்கி குடுங்களேன், ப்ளீஸ்..... ஒரு எண்டர்டெயின்மெண்ட் கூட இல்லாம ரொம்ப போர் அடிக்குது. உங்க கிட்ட, ஆன்ட்டி கூட எல்லாம் சரியா பேசக்கூட முடியல! உங்க பையன் தான் படி படின்னு சொல்லி என்னைய பாடாபடுத்துறாரு. பனிரெண்டு மணிக்கு படுக்க விட்டுட்டு காலையில அஞ்சு மணிக்கு பாடத்துல டவுட் கேட்டா கொட்டாவி தான் வருது..... ஆன்ட்டி நீங்க என்ன தப்பா நினைச்சாலும் பரவாயில்ல பவின் ஒரு பேய், பிசாசு, பூதம், மூணு கண்ணன்! அப்பாடா மனசுல வச்சிருந்தத எல்லாம் திட்டி முடிச்சாச்சு!" என்று சொல்லி பெருமூச்சு விட்டவளிடம் கௌதமன் புன்னகையுடன்,

"ஷைலு இப்பத்தான் பவினை டிஸ்டர்ப் பண்ணிட்டேன், சிலபஸ் கவர் பண்ணியாச்சுன்னு சொன்ன. அவனை பாராட்டுறன்னு பார்த்தா திடீர்னு திட்டுறியே; பவின் உனக்கு நிஜமாவே ஹெல்ப் பண்ணினா இல்லையா?" என்று கேட்டுக் கொண்டிருந்தவரிடம் அப்போது தான் அவள் பேசியதை கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்த பவின்,

"நான் செஞ்சது ஹெல்ப்பா இல்ல டைம்பாஸான்னு அவளுக்கு எக்ஸாம் அன்னிக்கு புரியும்ப்பா..... நான் வர்ற வரைக்கும் என்னை திட்டிட்டு வந்தவுடனே புக்ஸ்க்குள்ள தலையை விட்டுட்டு நடிக்காத ஷைலு! பத்து நாள் சிலபஸ்க்கு ப்ளான் பண்ணி அதை ஒரு வாரத்துல முடிச்சாச்சு. நாளைக்கு ஒரு நாள் ஜாலியா என்ஜாய் பண்ணு, நாளைக்கு மறுநாள் உன்னைய உங்க வீட்ல கொண்டு போய் விட்டுடுறேன்! ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் எக்ஸாம்ஸ் அண்ட் இந்தா உன்னோட சிம் கார்டு!" என்று கைகுலுக்கி அவளுடைய சிம்மை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டு சென்றான் பவின்.

ராகினி ஷைலுவிடம் பவினுடைய தாத்தா பாட்டி வீட்டுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க அவளும் வர முடியுமா என்று கேட்ட போது "போலாம் ஆன்ட்டி!" என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

அன்று இரவு 9 மணியளவில் உணவை முடித்து விட்டு தூக்கம் வரவில்லை என்று தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தவளை தேடி வந்தான் பவின்.

"ரூம்ல தூங்கிட்டு இருந்தியோன்னு நினைச்சு ரெண்டு மூணு தடவ கூப்பிட்டேன் ஷைலு, எனக்கு ரூமுக்குள்ள ஒரு டூ மினிட்ஸ் வேலை இருக்கு, போகட்டுமா?" என்று கேட்டான்.

"உன்னோட ரூம் தானே பவின்..... நான் கூட உள்ள இல்ல, எங்கிட்ட எதுக்கு பெர்மிஷன் கேட்டுக்கிட்டு; போயிட்டு வா! உன் லேப் கோட் வேணுமா?" என்று புருவம் தூக்கி சிரித்தவளிடம்,

"ஒரு வழியா என் ப்ரொஃபஷன் என்னன்னு கண்டுபிடிச்சாச்சு போலிருக்கு. நான் சுட்டுட்டு வந்த உன் கிரிக்கெட் பாலையும் பார்த்தியா?" என்று கேட்டவனிடம்,

"ம்ம்ம்!" என்று சொல்லி தரையை பார்த்து கொண்டு நின்றாள் ஷைலஜா. மனம் முழுவதும் "லவ்லி ஷை!" என்று அவன் சொல்வதைப் போல குரல் ஒலித்தது.

"கபோர்டை தொடவே கூடாதுன்னு உங்கிட்ட சொல்லி அதை திறந்தும் வச்சுருந்தேனே...... அது ஏன்னு நீ யோசிக்கவேயில்லயா மை ஷை இடியட்?" என்று கேட்டவனிடம் கன்னம் சிவக்க,

"ஆமால்ல..... ஏன்டா இப்படி செஞ்ச?" என்று கேட்டாள் ஷைலஜா.

"உனக்கு அட்வைஸ் குடுக்கிறதுன்னா உனக்கு காது கேக்குற தூரத்தில நின்னு பேசுனா போதுமே..... எதுக்கு உன்னை கட்டிப் பிடிச்சுக்கிட்டு உன் கிட்ட அத்தனை உதையும் வாங்குனேன்னு நீ யோசிக்கல இல்லையா மை லேஸி ரிவர்.....?" என்று கேட்டவனிடம் "ஹா....ஆ! நீ அன்னிக்கு ரொம்ப ஸீன் போட்டப்பவே எனக்கு டவுட் வந்திருக்கணும் ஆனா இதுவும் தோணவேயில்லை பாரேன்!" என்று முணங்கினாள் ஷைலு.

"உன்னோட பேவரைட் பாதாம் மில்க், மிளகாய் பஜ்ஜி, ஆலு சான்விட்ச் இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னாவது யோசிச்சியா? இல்ல அந்த ஐயிட்டம் மட்டும் தான் கண்ணு முன்னாடி தெரிஞ்சதா?" என்று கேட்டவனிடம் உதடு பிதுக்கினாள் ஷைலஜா.

"ஐ லவ் யூ...... உன் கிட்ட பாலால அடிவாங்குன நாள்ல இருந்து
உன் க்யூட்னெஸ், உன்னோட கோபம், உன்னோட வெட்கம் எல்லாமே என்னை ரொம்ப ரொம்ப மயக்குது ஷைலு. ஐ ஹாவ் ஃபாலன் இன் லவ்னு பெரிசா கத்தணும் போல தோணுது. ஏன் எதுக்குன்னு தெரியாம சில நேரம் தனியா சிரிச்சுட்டு நின்னுட்டு இருக்கேன். இந்த மேஜிக் எல்லாம் எங்கிட்ட மட்டும் நடந்தா போதுமா....... நீ ரெஸ்பான்ட் பண்ண வேண்டாமா? அத வர வைக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருக்கும் போது தான் உங்க விவேக் சித்தப்பா என்னை மீட் பண்ணினாரு! உன்னை பத்தி நிறைய விஷயம் என் கிட்ட சொன்னாரு. எனக்கு அப்போ தான் தெளிவா புரிஞ்சது, பார்கவ் மேல வச்சிருக்கிற இன்பாக்சுவேஷனை தாண்டி நீ என்கிட்ட வரணும்னா ஏதாவது ஒரு ஸ்டெப் எடுத்தே ஆகணும்னு; நீ நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொன்னது ஒரு ப்ளசண்ட் சர்ப்ரைஸ் தான்..... என்னால முடிஞ்ச அளவுக்கு உனக்கு கைட் பண்ணிட்டேன், பட் இப்பவும் நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணல, கல்யாணத்துக்கு அப்புறமா கூட உனக்கு என் மேல லவ் வரலாம். அதுவரைக்கும் நான் வெயிட் பண்றேன். வாவ் ஷைலு மழை தூர ஆரம்பிக்குது...... உனக்கு மழையில நனையுறதுன்னா ரொம்ப பிடிக்கும்ல.... ஏய் இரு ஓடாதம்மா!" என்று அவன் கையை உருவிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி மழைக்கு தப்பித்திருந்தவளை நினைத்து சிரித்து கொண்டான் பவின்.

பவினிடம் இருந்து விடுபட்டு ஓடி வந்தவள் இனியாவிற்கு கூப்பிட்டாள். "ரூபி என்னடீ இந்த நேரத்துல கால் பண்ணியிருக்க? பவின் அண்ணா கூட சண்டை போட்டியா?" என்று கேட்ட தன் தோழியிடம்,

"இல்லடீ லட்டு...... நான் உங்கிட்ட ஒண்ணு கேப்பேன். ஆனா நீ சிரிக்கக்கூடாது பார்த்துக்க; நான் பவினை லவ் பண்ணட்டுமா....ம்ஹூம் ஆல்ரெடி பண்றேன்னு தான் நினைக்கிறேன். ஏன்டீ லட்டு இரண்டு மாசம் முன்னாடி அவனை எனக்கு யாருன்னே தெரியாது. பார்த்து கொஞ்ச நாள்லயே இப்படி லவ் எல்லாம் வந்துடுமா என்ன? ஐயோ ஒரே குழப்பாச்சியா இருக்கு, ஏதாவது சொல்லேன்டீ!" என்று கேட்டவளிடம்,

"முதல்ல ஒழுங்கா ஊருக்கு வந்து எக்ஸாம்ஸ முடிக்கிற வழியைப் பாரு, அதுக்குள்ள உன் மனசுக்குள்ள வந்திருக்கிற இந்த ஃபீலிங்க்கு நம்ம ஒரு பேர் வைக்கலாம்! லவ் தான்னு கன்பர்ம் ஆகிடுச்சுன்னா பவின் அண்ணா கிட்ட எக்ஸ்பிரஸ் பண்ணிடு!" என்று அறிவுரை சொன்ன தன் தோழியின் கூற்று சற்று ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்ததால் மறுநாள் பவின் தாத்தா பாட்டியை பார்த்து விட்டு ஆனந்த ஸாகரத்திற்கு கிளம்பினாள் ஷைலு.

இனியாவும், ஷைலுவும் அவரவர் துணையின் உதவியுடன் பைனல் எக்ஸாம்ஸ் நல்ல முறையில் எழுதி முடித்தனர்.

இன்று இனி

கண்டவுடன் குத்துதடீ
கத்திரிக்கோல் கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல
கிறங்கடிக்கிற ஜின்னு!
பத்த வச்ச மத்தாப்பு போல்
மினுமினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல
பதிச்ச வைரக்கல்லு....... என்று பாடிய படி கண்ணாடியில் தலைசீவிக் கொண்டு இருந்தவனிடம்,

"வைரக்கல்லு எல்லாம் நல்லா தான்டா இருக்கு, இப்போ நீ கிளம்புறியா இல்லையா?" என்று அதட்டிக் கொண்டு இருந்தான் ஜீவானந்தன்.

"போலாம் இருலே...... பொறவு நான் சொன்னத மனசுல வச்சுக்கிட்டல்லா; நாளைக்கு முகூர்த்தத்துல......." என்றவனை வாயை மூடிக்கொண்டு இருக்க சைகை செய்தவன்,

"யாருக்கும் தெரியாம தாலிக்கு பதிலா நீ குடுத்த செயினை மாத்தி தரணும் அவ்வளவு தானே......இதையே எத்தனை தடவ தான்டா சொல்லுவ! எல்லார் முன்னாடியும் இன்னொரு தடவ என் தங்கச்சி கழுத்துல தாலி கட்டுனா குறைஞ்சு போயிடுவியாக்கும்?" என்று கேட்ட ஜீவாவிடம்,

"அடக் கூவப்பயலே மாசம் ஒருக்கா எம் பொஞ்சாதி கழுத்துல கட்டுறதுக்கு அது என்ன அட்டியலா? தாலிலே தாலி! என்னைப் பொறுத்தவரையில எங்க ரெண்டு பேருக்கும் கலியாணம் எப்பவோ நடந்து முடிஞ்சிடுச்சு. அத அம்புட்டு பயலுக்கும் சொல்றதுக்குதேன் இந்த நிச்சயம், கல்யாணம்ங்கிற பேரெல்லாம், இனியா புள்ள கூட நிறைய போட்டோ பிடிச்சுக்கணும்; அவளுக்கு என் கையால சாப்பாடு ஊட்டி விடணும். மாலைக்கு மறவால அவ கையை புடிச்சி வச்சுட்டு ரவுசு பண்ணணும், அவ்வளவுதேன்.......ஆனா மறுக்கா தாலி கட்டுற வேலையெல்லாம்... ம்ஹூம்!" என்று சொல்லி மறுப்பாக தலையை ஆட்டியவனிடம் "எங்கிட்ட சொல்லிட்டல்ல, நான் பார்த்துக்குறேன்டா பிக்பாய்.... கிளம்பலாமா?" என்று கேட்டு ராசுவின் நிச்சயதார்த்தத்துக்கு அவனை கூட்டிக் கொண்டு திருமண மண்டபத்திற்கு கிளம்பினான் ஜீவானந்தன்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Continue Reading

You'll Also Like

81.2K 2.5K 46
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...
24.1K 1.1K 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்த...
95.5K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
82.2K 3.9K 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா...