💟 ஜீவாமிர்தம் 70

2K 121 15
                                    

"ராம் என்னைய காணும்னு தேடி நம்ம வீட்டுக்கு யாராச்சு வந்தாங்களா? என்னை விசாரிச்சு எனி போன் கால்ஸ் ஆர் மெசேஜஸ்..... சம்திங் லைக் தட்?" என்று வீடியோ காலில் கேட்ட தன் மகனிடம்,

"ஏன்டா கிளம்பிப்போகும் போது
எவன் கிட்டயும் கடன் எதுவும் வாங்கி வச்சுட்டு போயிட்டியா..... இங்க உன்னை எவன்டா விசாரிக்கப் போறான்; அதெல்லாம் ஒரு பய கேக்கல!" என்று சொன்னார் பலராம்.

"ஒரு மெசேஜ் கூட வரலையா.....?" என்று கேட்ட தன் குரல் சற்றே மெலிந்து ஒலித்ததை ராகவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அன்று தன் மாமாவின் வீட்டில் அவளை பார்த்தவன் தான்...... அதற்கு பிறகு அவளும் அவனை தொடர்பு கொள்ளவில்லை. இவனும் அவளை அழைத்து பேசவில்லை.

"பெரிசா லவ் பண்றேன்னு மட்டும் சொல்லிட்டா போதுமா? ஒரு சின்சியர் கன்ஃபெஷன் வேண்டாம், என்னை பார்த்தவுடனே உனக்கு லவ் வந்ததுன்னா அது நிச்சயம் பப்பி லவ்வா தான் இருக்கும். ஷீ இஸ் நாட் யுவர் கேர்ள் ராகவ். டோண்ட் திங்க் அபௌட் ஹெர் சீரியஸ்லி....." என்று சொல்லி மூளை திரும்ப திரும்ப கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தாலும், அவனது மனம் சமீப காலமாக அனைத்து வேலைகளுக்கு மத்தியிலும் வசுந்தராவிடமே போய் நின்றது.

"ம்ம்ம்..... ஓகே நம்ம சரஸ் என்ன பண்றாங்க? அவங்க கிட்ட போனைக் குடுப்பா, நான் பேசணும்!" என்று சொன்ன தன் மகனிடம்,

"ம்ஹும் எங்கம்மா, உங்கம்மா, பெரியம்மா, அண்ணி யார்ட்டயும் நீ இப்போ பேச முடியாது. நாங்க எல்லாரும் ரெண்டு நாள்ல மலைக்கு கிளம்புறோம். கவி அக்கா பொட்டீக்கை இங்க க்ளோஸ் பண்ணிட்டு அங்க புதுசா ஓப்பன் பண்ண போறாங்க. மாமா ஒரு நாள் முன்னாடியே எல்லாரும் வரணும்னு சொல்லிட்டாங்க. ஸோ வழக்கம் போல கிச்சன்ல ஸ்வீட் அது இதுன்னு ப்ரிப்பரேஷன்ஸ் ஓடிட்டு இருக்கு. சரஸ் இஸ் பெர்பெக்ட்லி ஃபைன், நீ வச்சுடு. பை கண்ணா!" என்ற தன் தந்தையிடம்,

"ஏய் ராம்..... என்னைய யாரும் ஏன் பங்ஷன்க்கு கூப்பிடவேயில்ல, அட்லீஸ்ட் இன்ஃபார்ம் கூட பண்ணல. வாட் த ஹெல் இஸ் கோயின் ஆன் தேர்?" என்று கேட்ட தன் மகனின் கேள்விக்கு பதில் சொல்ல பலராம் லைனில் காத்திருக்கவில்லை.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now