💟 ஜீவாமிர்தம் 29

2.6K 152 67
                                    

ஜீவானந்தன் தனது தந்தை, தாயின் அறைக் கதவை தட்டி அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான். ஜெய் நந்தன் கதவைத் திறக்கையிலேயே, "இன்னும் கால் மணி நேரம் கழிச்சு வா ஆனந்த், உங்கம்மா எனக்கு அர்ச்சனை நடந்திட்டு இருக்கா. உன் முன்னாடியெல்லாம் நான் திட்டு வாங்க முடியாதுடா!" என்று சொன்னவரின் வார்த்தைகளை காதில் வாங்காமல், "அதெல்லாம் பரவாயில்லை, வழியை விடுங்கப்பா!" என்று சொல்லிவிட்டு அறையில் நுழைந்து தன் தாயின் அருகே சென்று அமர்ந்தான்.

"ம்மா.... உங்கள பார்த்தாலே தெரியுது. 
ரொம்ப கோபமா இருக்கீங்க. பட் நீங்க கோபப்படுற அளவுக்கு என்ன விஷயம் நடந்ததும்மா?" என்று கேட்ட படி தன் தாயின் கைகளைப் பற்றிக் கொண்டான் ஜீவானந்தன்.

"நந்து கண்ணா..... உங்கப்பா எங்கிட்ட கொஞ்சம் பேசணும்னு சொல்லி என்னைக் கூட்டிட்டு வந்தாரு; அவர் கூட ஃப்ரீயா டைம் ஸ்பெண்ட் பண்ணி ரெண்டு மூணு மாசமாச்சேன்னு கீழே எல்லாரும் உன்னைய ரவுண்ட் அப் பண்ணினதை கூட கண்டுக்காம நான் இங்க வந்தா......" என்று நிறுத்திய தன் தாயிடம்,

"அப்போ உங்க கோபம் பண்ணையார் மேல தான்.... என்னம்மா பண்ணினாரு?" என்று கேட்டான் ஜீவா.

"நம்ம அப்பாவோட ப்ரெண்டு கெளதமன் அங்கிள் இருக்காங்கல்ல, அவர் பையன் கல்யாணம் ஏதேதோ ரீசனால நின்னு போயிடுச்சாம். அந்த பையனை நம்ம ஷைலுவுக்கு மாப்பிள்ளையாக்கலாமான்னு கேக்குறாருடா இவரு....... அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு நினைச்சு அந்தப் பவின் பையன் அவ மேல ஆசையா இருந்திருப்பான் இல்லையா......? இப்போ அந்த பொண்ணு கிளம்பிட்டான்னு நம்ம ரூபியை அவனுக்கு பொண்டாட்டியாக்கி பார்க்க உங்கப்பாவுக்கு எப்படிடா மனசு வந்துச்சு? கெளதமன் அங்கிளும் ராகினி ஆன்ட்டியும் நம்ம பேமிலிக்கு நிறைய விதத்துல ஹெல்ப் பண்ணியிருக்காங்க; எனக்கு உடம்பு சரியில்லாம கஷ்டப்பட்டப்போ, நீ பிறந்தப்போ, ரூபி பிறந்தப்போ நல்லா பார்த்துக்கிட்டாங்க தான், ஆனா இப்போ அந்தப் பையன் கல்யாணம் நின்னு போச்சுன்னு எவ்வளவு வெக்ஸ் ஆகி உட்கார்ந்து இருக்கானோ தெரியல. எம் பொண்ணை அந்தப் பையன் கூட...... கடவுளே என்னால நினைச்சு கூட பார்க்க முடியல. என்னிக்கும் இல்லாத திருநாளா உங்கப்பா நிலான்னு கூப்பிட்டு வாம்மா பேசலாம்ன்னு கூப்பிட்டப்பவே எனக்கு பயமாயிருந்தது. கண்டிப்பா என் பொண்ணுக்கு இந்த மாப்பிள்ளைய கல்யாணம் பண்ண நான் சம்மதிக்கவே மாட்டேன். அவர் கிட்ட தெளிவா சொல்லிடு. அவர் பார்க்கிற பையனுக்கு பணம் இருக்கோ இல்லையோ, அவன் மனசு பூரா நம்ம ரூபியை தான் வச்சிருக்கணும்.
ஏற்கனவே ஒருத்தியை மனசுல வச்சிருந்து, இப்போ செகண்ட் ஆப்ஷனா நம்ம ரூபியை அவனுக்கு குடுத்து.... இதெல்லாம் எனக்கு சரியாப்படல!" என்று சொல்லி விட்டு மூச்சு வாங்கியவரிடம் சிறு சிரிப்புடன்,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now