💟 ஜீவாமிர்தம் 58

1.8K 99 13
                                    

பவின் ஷைலுவின் திருமணம் மிகவும் தடபுடலாக முடிந்ததில் பெரியவர்கள் அனைவர் முகத்திலும் மனநிறைவும், மகிழ்ச்சியும் தெரிந்தது. மணமக்களை ஆசிர்வாதம் செய்யும் போது நிர்மலாவின் கண்கள் கலங்கியதை பார்த்து அர்ஜுனுக்கு தன் தங்கை அவளது மகனின் திருமணத்தை இப்படி ஆனந்தக் கண்ணீருடன் பார்க்க கொடுத்து வைக்கவில்லையே என்று வருத்தமாக இருந்தது. பின்னே அவருக்கும் தானே அவர் மகளின் திருமணத்தை காணும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது, அந்த வருத்தம் வீட்டின் அனைத்து பெரியவர்களின் மனதிலும் ஓர் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது. 

நிர்மலாவின் மாமா சபரீசன் குடும்பத்தினர், ஜெய் நந்தனின் தாத்தா பரமேஸ்வரன் குடும்பத்தினர், கௌதமனின் தந்தை வழி உறவுகள் அனைவரும் வெகு நாட்களுக்கு பிறகு ஷைலஜாவின் திருமணத்திற்கு வந்திருந்தனர். அவர்களை ஜீவாவும், விவேக்கும் கவனித்துக் கொண்டு திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் மணமக்களுக்கு ஆசி வழங்க மணமேடைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

அர்ஜுன் நிர்மலாவின் அருகில் இருந்தத ஒரு சேரில் வந்தமர்ந்தார். அவரைப் பார்த்து புன்னகைத்த நிர்மலா, "சாப்டீங்களா அண்ணா?" என்று கேட்டார்.

"கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன்மா! இது நம்ம வீட்ல நடக்கிற கல்யாணம் மாதிரியே தெரியல நிர்மலா. எல்லாரோட முகத்திலயும் ஏதோ ஒரு விஷயம் மிஸ்ஸிங். கோபத்தை உள்ளுக்குள்ள வச்சுட்டு வெளியில அமைதியா இருக்கற மாதிரி தெரியுறாங்கன்னு தோணுது. மீரால்லாம் ஒரு மாதிரி எரிச்சலோட தான் என் கிட்ட கூட பேசுறா. உனக்கு ஜீவா மேலயும், கவி மேலயும் கோபம் வரலையாம்மா?" என்று கேட்ட தன் அண்ணனிடம் புன்னகையுடன்,

"நந்து மேல கோபப்பட எனக்கு என்ன தகுதி இருக்குண்ணா? எட்டு வருஷமா என் பையன் தனியா புழுங்கிட்டு இருந்தப்போ அவன் அம்மாவா நான் என்னத்த செஞ்சேன்..... அங்கயும் இங்கயும் என்ன நடக்குதுன்னு வேடிக்கை மட்டும் தானே பார்த்துட்டு இருந்தேன்;  இப்போ அவனோட லைஃப்ல நம்ம யார்ட்டயுமே கலந்துக்காம ஒரு முடிவு எடுத்தப்போ மட்டும் என் புள்ளயாடா நீன்னு கேட்டு அவன ரெண்டு அறை அறைஞ்சேன்னா என் மனசாட்சி கேட்குற கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாதுண்ணா! ஒரு அம்மாவா அவனை நம்பி வந்த கவிம்மாவை சந்தோஷமா வச்சுக்க சொல்லி சொன்னேன், அது கூட என்னோட மனதிருப்திக்காக தான்..... மத்தபடி எல்லாரும் இப்படி முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்கறதுனால நடந்த எதுவும் மாறிடப் போறதில்ல! மேடையிலிருந்து நந்து கூப்பிடுறான். நான் அங்க போறேண்ணா!" என்று சொல்லி விட்டு போன தன் தங்கையின் பேச்சை கேட்டு பெருமூச்சு விட்டார் அர்ஜுன்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now