💟 ஜீவாமிர்தம் 18

2.4K 148 87
                                    

அனைவரும் விருந்து சாப்பிட்டு விட்டு இனியா, ராசுவின் திருமணத்தை எவ்வாறு திட்டமிடலாம் என்று பேசிக் கொண்டிருந்த போது இனியாவின் செல் சிணுங்கியது.

"போன்ல யாருடா லட்டு?" என்று கேட்ட ஜெய் நந்தனிடம், "ரூபி தான்  கூப்பிடுறா பெரியப்பா! அவ கிட்ட பேசச் சொல்லியிருந்தா. நான் கூப்பிடல.... அதான் அவ கூப்பிட்டுட்டா; பேசிட்டு வர்றேன் பெரியப்பா!" என்று அவள் சொல்லி விட்டு அனைவரையும் தயக்கத்துடன் பார்க்க ராசு முதல் ஆளாக அவள் முன்பு வந்து,

"மெத்துல போய் பேசு! உன் ஸ்நேகிதி தானே..... கண்டிப்பா நம்பளத்தேன் கூப்பிட்டு ஏசுவாக! நானும் வர்றேனே.....!" என்று கேட்டவனை ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டுக்கு வெளியே வந்து மாடிப்படிகளில் ஏறினாள் இனியா. அவள் பின்னால் ராசுவும் சென்றான்.

இனியா அலைபேசியை அட்டெண்ட் செய்ததும் ராசு அதைக் கையில் வாங்கி ஸ்பீக்கரில் இட அதற்குள்  ஷைலஜா பொருமித் தீர்த்து விட்டாள்.

"லட்டு...... என்னடீ யாருமே என்னைய  கூப்பிடவேயில்ல...கவியும், பாகி அத்தானும் எனக்கு பத்து தடவை கால் பண்ணிட்டாங்க.
அங்க என்ன தான் நடக்குது? அந்த ஆளுக்கு ஏதாவது பனிஷ்மெண்ட் குடுத்தாங்களா இல்லையா?  நீ என்ன முடிவு பண்ணியிருக்க? போடா நீயுமாச்சு.... உன் ரிலேஷன்ஷிப்பும் ஆச்சுன்னு இந்த இன்சிடென்டை ஒரு பாஸிங் க்ளவுடா நினைச்சு மனசுல இருந்து தூக்கி எறிஞ்சுட்டு வந்துடுடீ லட்டு! அவன் நமக்கு வேணாம்!" என்று தன் மனதில் நினைத்ததை எல்லாம் தோழியிடம் கொட்டிக் கொண்டிருந்த ஷைலஜாவிடம்,

"எலா என்னவே ரொம்ப துள்ளுறவுக; உம்ம சலம்பல கொஞ்சம் நிறுத்திக்கிடும்! காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தூக்கிட்டு போனாக்குலல்லா இருக்கு உம் பேச்சு; பாஸிங் க்ளவுடாமுல்ல....... நெனைப்பீகடீ; ஏன் நெனைக்க மாட்டீக! உம்ம தோழிக்கு இப்படி ஒண்ணுத்துக்கும் வொதவாத சோலியெல்லாம் சொல்லிக் குடுத்துட்டு இருந்தீக.... நல்லாயிருக்காது. சொல்லிப்புட்டேன். இனியா புள்ள இனிமே என் சொத்து, எம் பொஞ்ஜாதி மனச கலைக்குற வேலையெல்லாம் இனி செய்யாதீக! கடைய சாத்துங்க!" என்றான் ராசு தன் மீசையை முறுக்கிக்  கொண்டு.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now