💟 ஜீவாமிர்தம் 46

2.3K 153 58
                                    

இருபது நாட்கள் இயல்பான வேகத்தில் கடந்திருந்தன. ஆனால் ஒவ்வொருவர் மனநிலையிலும் நாட்கள் மிக
வேகமாகவும், மிக மெதுவாகவும் கடந்ததாக எண்ணம் இருந்தது. நாளை அதிகாலையில் இனியா இசக்கிராசுவின் திருமணம் நடக்கவிருந்தது, நான்கு நாட்கள் கழித்து இருக்கும் ஒரு முஹூர்த்தத்தில் பவின் ஷைலஜா திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர். திருமணத்திற்கு தேவையான அழைப்பிதழ் விநியோகம், தன் இரண்டு தங்கைகளுக்கு தேவையான நகைகள், பட்டுப்புடவை, சீர்வரிசை பொருட்கள், இனியா ஷைலு விருப்பத்திற்கு ஏற்ப அவர்களது அறை மாற்றம், மாப்பிள்ளைகளைக்கு தேவையான உடைகள், அவர்களுக்கு மனைவியின் அண்ணன் என்ற முறையில் தான் செய்ய வேண்டிய செய்முறை அனைத்தையும் ஜெயந்தன், பத்மாவிடம் கேட்டு ஒற்றை ஆளாக சேகரித்து கொண்டு இருந்தான் ஜீவானந்தன்.

தன் அன்னையின் ஏக்கம் அறிந்து வானதியிடம் கேட்டு சபரீசன் ஸ்ரீமதியின் இருப்பிடம் அறிந்து ரிஷிகேஷத்திற்கு அலைபேசியில் பேசி தன் அன்னையின் மாமனை இனியா, ஷைலஜா கல்யாணத்துக்கு அழைத்து விட்டான். விழுப்புரத்தில் பரமேஸ்வரன் தாத்தாவின் வீட்டிலும் நவீனிடம் நேரடியாக சென்று அழைப்பு விடுத்திருந்தான், இதெல்லாம் தன் அன்னையும், தந்தையும் அவனிடம் சொல்லாத வேலை தான் என்றாலும் ஜீவாக்குட்டியிடம் பொறுப்பை விட்டால் அதை சிறப்பாக செய்து முடிப்பான் என்ற நம்பிக்கை அனைவர் மனதிலும் சிறு வயதிற்கு பின் மறுபடியும் வர வேண்டும் என்பதற்காகவும், தானே பொறுப்பெடுத்து செய்கிறோம் என்ற உற்சாகத்திலும் திட்டமிட்டு நாட்கள் பத்தாமல் வேலைகளை செய்து கொண்டு இருந்தான் அண்ணன்.

இதற்கிடையில் ஜெயந்தன், பத்மா, ஜெய்நந்தன், நிர்மலா, அர்ஜுன், மீரா, பலராம், கீதா அனைவரும் சேர்ந்து மாணிக்கத்தின் காரியத்தையும் மனநிறைவுடன் செய்து முடித்திருந்தனர். சிறியவர்கள் அனைவரும் ஒவ்வொரு வேலைகளில் மூழ்கி இருந்ததால் ஜெய் நந்தன் தன் மாணிக்கம் அண்ணாவின் காரியத்தை தன் பொறுப்பில் ஏற்று நடத்தி முடித்தார். கடைசி தருணத்தில் அவர் கூட இருந்து செய்ய வேண்டியதை செய்யவில்லை என்று உறுத்திக் கொண்டிருந்த மனம் சற்று சமனப்பட்டது அவருக்கு. 

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now