💟 ஜீவாமிர்தம் 73

1.7K 84 9
                                    

அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கு தன் மனைவியை கன்னம் சுரண்டி தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கொண்டு இருந்தான் ஜீவானந்தன்.

"ம்ப்ச், தூக்கம் வருது நந்து.....!" என்று சொல்லி விட்டு அவன் இடுப்பை வளைத்து பிடித்துக் கொண்டவளிடம்,

"அம்முலு இந்த மதர்ஸ் டே, பாதர்ஸ் டே, ப்ரெண்ட்ஷிப் டே எல்லாம் சொல்றாங்களே..... அத மாதிரி இன்னிக்கு உனக்கு மட்டும் ஸர்ப்ரைஸ் டே! ஸர்ப்ரைஸ் நம்பர் ஒன் என்ன தெரியுமா? அஜுவும், மீருவும், சரஸ் பாட்டியும் இனிமே மலையிலயே நம்ம கூடத் தான் இருக்கப் போறாங்க. ஆனா நம்ம வீட்ல இல்ல, ஜஸ்ட் ஒரு இருபது நிமிஷ ட்ரைவ்ல இருக்கிற ஒரு வீட்ல..... இனிமே எப்போ நினைச்சாலும் அத்தை கையால பப்பு புவா சாப்பிட கிளம்பிடலாம். ஹாப்பி தானே! பீ ரெடி டூ ஹாவ் யுவர் நெக்ஸ்ட் ஸர்ப்ரைஸ்..... மேக்ஸிமம் ட்வென்டி மினிட்ஸ் தான். அதுக்குள்ள கீழே இறங்கி வர்ற!" என்று சொல்லி விட்டு அவளுக்கு ஒரு அவசர முத்தத்தை தந்து விட்டு சென்று விட்டான் ஜீவானந்தன்.

அரை உறக்கத்தில் தலையை பிடித்துக் கொண்டு எழுந்த கவிப்ரியாவிற்கு ஜீவானந்தனின் பேச்சுக்கள் அவள் மூளையில் சென்று பதிந்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் தயாராகி கீழே இறங்கி வந்தாள். தானே வலிய சென்று சம்மதம் சொன்ன பிறகும் தன் காதலை காக்க எண்ணி கண்ணியம் காத்துக் கொண்டிருப்பவனிடம் முன்பெல்லாம் இல்லாத அளவில் காதல் மலர்ந்தது.

இப்பொழுதெல்லாம் மற்ற எவரது வார்த்தைகளும் சரியாக காதில் கூட விழவில்லை கவிப்ரியாவிற்கு. அம்முலு அம்முலு அம்முலு என்று அவனது குழையும் உச்சரிப்பு மட்டுமே அவள் காதில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டு இருக்கிறது. இவ்வளவு வருடங்கள் சேர்த்து வைத்திருந்த அவள் மீதான அவனது அன்பையும் அவர்கள் ஆரம்பித்து வைத்த காதல் கடித விளையாட்டு கவிப்ரியாவிற்கு புரிய வைத்தது. கவிதை எழுதத் தெரியாத கவியின் கணவன் கவியின் செயல்களையே கவிதைகளாக்கி ரசித்து, அவளையும் அந்த வரிகளை ரசிக்க வைத்து கொண்டு இருந்தான்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now