💟 ஜீவாமிர்தம் 15

2.9K 136 55
                                    

பூம்பாறையில் திருவிழாவையொட்டி ஜெய் நந்தன் குடும்பத்தினர் அனைவரும் ஊருக்கு வந்து சேர்ந்திருந்தனர். ஜீவா ஜெய்யுடன் இணைந்து விட்டான் எனக் கேள்விப்பட்டு அவனை மலைக்கு வரவேற்பதற்காக  
நிர்மலாவின் மாமன் மகள் வானதி, அவளது கணவன் சேகர் மற்றும் அவர்களது மகன் பிரசாந்துடன் வந்திருந்தார். தன் தோழியை பார்த்த உற்சாகத்தில் அவளை கட்டிப் பிடித்துக் கொண்டு கதையளந்து கொண்டிருந்த நிர்மலாவிடம்,

"கைய எடுறீ எரும; இப்போ தான் என்னைய உனக்கு என்னைய கண்ணு தெரியுதாக்கும்.... உன்னைய அடிக்கடி பார்க்க முடியுங்கறதுக்காகவே சேகரை கல்யாணம் பண்ணி இங்க வந்தவ நானு; அப்பா அம்மா தப்பு செஞ்சாங்கன்னா அதுக்கு நான் என்ன நிம்மி பண்ணுவேன்? என்னையும் எதுக்கு அவாய்ட் பண்ற?" என்று வருத்தத்துடன் கேட்ட வானதியை முறைத்த நிர்மலா,

"ஏய் நதி, லூசுத்தனமா ஏதாவது உளறுன, வாய் மேலயே அடி விழும்! வீட்டு வேலை, பண்ணை வேலை, எஸ்ஜேஎன் வேலைன்னு எத்தனைய பார்த்துக்க வேண்டியதிருக்கு தெரியுமா..... நெனச்ச நேரம் பூம்பாறைக்கும், சென்னைக்கும் ரவுண்ட்ஸ் வேற! உண்மையாவே வெளிய கிளம்பறதுக்கு எல்லாம் டைமே இல்ல கோபிச்சுக்காதடி!" என்று சொல்ல வானதி சற்று சமாதானம் அடைந்தார்.  

"என்ன சில்வர்பால்ஸ்..... உங்க சண்டை எல்லாம் முடிஞ்சிடுச்சா? இப்போ ஆனந்துக்கு உன்ன இண்ட்ரோ குடுக்கலாமா?" என்று வானதியிடம் கேட்ட ஜெய் தன் மகனிடம் "ஆனந்த் வானதி அத்தைய நியாபகம் இருக்குல்ல?" என்று  கேட்டதும் ஜீவா தன் தந்தையிடம், "விழுப்புரத்து நதி ஆன்ட்டிய எப்படிப்பா மறந்துட முடியும்? நல்லா நியாபகம் இருக்கு!" என்று சொல்லி வானதி, சேகர் மற்றும் பிரசாந்துடன் கலகலப்பாக சிறிது நேரம்  பேசிக் கொண்டிருந்தான்.

பிரசாந்த் ஷைலஜாவிடம் ஏதோ கிண்டல் செய்யவும் பார்கவ் யாரும் பார்க்காத நேரம் அவனை தனியாக கழுத்தில் கை வைத்து தள்ளி சென்று, "டேய் லில்லிபுட்; உன் சைஸூக்கு ஏத்த வேலையை பாரு. அநாவசியமா ரூபினியை டிஸ்டர்ப் பண்ணி என் கிட்ட அடி வாங்காத. சொல்லிட்டேன்!" என்று பார்கவ் சொன்னவுடன் பிரசாந்த் ஒரு முறைப்புடன் சற்று எட்டவே நின்று கொண்டான்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now