💟 ஜீவாமிர்தம் 9

3K 144 39
                                    

கவிப்ரியா ஜீவாவின் கேள்வியால் திகைத்து திருதிருவென விழித்துக் கொண்டிருந்த போது ஜெய் நந்தன் தன் மருமகளின் சில நொடிகள் முகச்சிவப்பை ரசித்து விட்டு, "பாவம் நம்ம ஏஞ்சல்! இத்தனை பேரு சுத்தி நின்னுட்டு இருந்தா ஆனந்த் கேள்விக்கு எப்படி பதில் சொல்லுவா?" என்று அர்ஜுனை நோக்கியவர், மேலே கை காட்டினார். அர்ஜுன் அவரின் சமிக்ஞை புரிந்து விட்டதாக பெருவிரல் உயர்த்தி காட்டவும் பெருமூச்சுடன் தன் மனைவியிடம்,

"நிர்மலா, எப்பவும் ஏஞ்சல் ஜெயிக்கற கேமை சீட்டிங் பண்ணி இன்னிக்கு நீ ஜெயிச்சுட்ட.....!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவரின் பக்கம் தன் கோபப்பார்வையை செலுத்திய ஜீவா,

"டேய் பாகி, உன் தங்கச்சியை கேம்ல தோக்கடிக்க போறேன்னு முன்னாலேயே நான் அவ கிட்ட சொல்லிட்டேன். அவ தான் பெரிய ஹெட் வெயிட் பிடிச்சவளாச்சே...... முடிஞ்சா என்னை ஜெயிச்சு காட்டுடா பார்ப்போம்ன்னா; யாரும் யாரையும் சீட் பண்ணவும் இல்ல. எங்கம்மாவை யாரும் அநாவசியமா திட்டவும் தேவையில்ல......!" என்று சொல்லிக் கொண்டு இருக்க பார்கவ் தலையை பிடித்துக் கொண்டான். ஜீவா அர்ஜுன் புறம் பார்த்து, "டேய் மாமா அத்தையை கூட்டிட்டு நீ எங்க மேல போயிட்டு இருக்க?" என்று கேட்டவனிடம் கோபத்தில் பற்களை கடித்தவாறு,

"அடி செருப்பால...... உங்கப்பனை பார்த்தவுடனே திமிர் ஏறிடுச்சாடா உனக்கு? எப்பவும் என் கிட்ட மரியாதையா பேசணும்.... இல்ல தோலை உரிச்சுடுவேன். பார்த்துக்க! உனக்கு பயந்து பம்முறதெல்லாம் உங்கொப்பன் தான்! நான் இல்ல, மேல தான் இருப்பேன்! கவிம்மா கிட்ட ஏதாவது நொரைநாட்டியம் பண்ணின..... கீழ வந்து ஒரே மிதி தான்......ஜாக்கிரதை!" என்று சொன்ன தன் மாமனிடம் சிரிப்புடன் அருகில் சென்று, அவரை கட்டிப் பிடித்து கன்னம் கொஞ்சி சமாதானம் செய்து விட்டு வந்தான் ஜீவானந்தன். இதற்கு மேல் வீட்டிற்குள் நிற்பது சரியில்லை என்று உணர்ந்த ஜெய் நந்தன்,

"எல்லாரும் சேர்ந்து பங்ஷனுக்கு ஷாப்பிங் முடிச்சுட்டு வந்துடலாம். அஜு உனக்கு, மீராவுக்கு, ஏஞ்சலுக்கு, சின்னவருக்கு நிர்மலா பார்த்து செலக்ட் பண்ணிடுவா. மீரு உனக்கு ஓகே தானேடா?" என்று கேட்க, மீரா "சரிண்ணா! பார்த்து போயிட்டு சீக்கிரம் வந்துடுங்க!" என்று சொல்லி விட்டு மேலே சென்றார்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now