💟 ஜீவாமிர்தம் 17

2.8K 158 125
                                    

ராசுவின் வீட்டில் அனைவரும் குழுமியிருந்தனர். இனியா நிர்மலாவின் மடியில் படுத்துக் கொண்டு மௌனமாக கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தாள். அடிபட்ட மான் குட்டி போல் மிரண்டு போய் நிற்கும் தன் மகளைக் கண்டதும் ஜெய் நந்தனுக்கும், விவேக்குக்கும் அடக்க மாட்டாத ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.

ஆனால் ராசு எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் சட்டவட்டமாக நடு வீட்டில் அமர்ந்து அனைவரையும் பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஜீவானந்தன் தன் தங்கையின் கண்ணீரை காண முடியாமல் வீட்டின் வெளிக் கூடத்தில் நின்று கொண்டு இருக்க ராசு அவனை கூவி அழைத்தான்.

"எலேய் மச்ச்ச்சான்..... கெரகம்! என்னைய விட இளவட்டத்தை எல்லாம் மரியாதையா முறை வச்சு கூப்பிட வேண்டியிருக்கு. என்ன செய்ய; என் பொஞ்ஜாதி உன்னைய அண்ணாங்காலே.... அப்ப எனக்கு நீ மச்சான்தேன்! உள்ளார வாலே!" என்று கூப்பிட்டவன் குரலை கேட்டதும் அமைதியாக உள்ளே வந்த ஜீவானந்தன்,

"மிஸ்டர் இசக்கிராசு உங்க கிட்ட அஞ்சாறு கேள்வி கேக்கணும். அதுக்கு பதில் சொல்றீங்களா?" என்றான்.

இவன் என் காலுக்கு கீழே குழி பறிக்க திட்டம் போடுகிறான் என்று நினைத்துக் கொண்டு, "எது வேணும்னாலும் கேளுங்க மச்சான். ஆனா உட்கார்ந்து மோர் குடிச்சிட்டு சாவகாசமா கேளுங்க!" என்றான் ராசு புன்னகையுடன்.

"ஐ டோண்ட் நீட் யுவர் ஹாஸ்பிட்டாலிட்டி மிஸ்டர் இசக்கி! டோண்ட் சேன்ஜ் த டாப்பிக் அண்ட் கம் டூ த மேட்டர்!" என்றான் ஜீவானந்தன்.

"யெஸ் கம்மிங் டூ த மேட்டர் மிஸ்டர் ஜீவானந்தன். ப்ளீஸ் சூட் யுவர் கொஸ்ட்டீன்ஸ்!" என்று கேட்டவனை இனியா நிர்மலாவின் மடியில் இருந்து முகம் தூக்கிப் பார்த்தாள். அவன் அவளைப் பார்த்து கண்சிமிட்ட தலையை திருப்பிக் கொண்டாள்.

"வாட்ஸ் யுவர் க்வாலிபிகேஷன்.....?" என்று கேட்ட ஜீவாவிடம்,

"கம்ப்ளீடட் எம்எஸ்சி அக்ரி அண்ட் ஐ'ம் அ ரிசர்ச் ஸ்காலர் இன் ------ யுனிவர்சிட்டி டூ!" என்றவனிடம் அப்பட்டமான அதிர்ச்சியை
காட்டினான் ஜீவானந்தன்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now