💟 ஜீவாமிர்தம் 75

5K 146 112
                                    

"டேய் ஹல்க், எப்போ பார்த்தாலும் யார் கிட்டயும் சொல்லாம கொள்ளாம என்னைய இப்படி வாயைப் பொத்தி தூக்கிட்டு வந்துடுறியே...... வீட்ல நம்மள தேடப்போறாங்கடா. இன்னிக்கு ஷாப்ல எல்லார்ட்டயும் ப்ளெசிங்ஸ் வாங்கினப்போ உன்னைய கல்யாணம் பண்ணிக்கோன்னு அவசரப்படுத்தி அடம் பிடிச்சுட்டுனோன்னு ஃபீல் ஆச்சு நந்து...." என்று சொன்ன தன் மனைவியிடம் புன்னகையுடன்,

"சாவிய கையில குடுத்து ஒரு வாரம் நாங்க இந்தப் பக்கம் வரமாட்டோம்னு லீடும் குடுத்து நம்மள கிளப்பி விட்டதே தாத்தா தான்; அதனால நம்ம ரெண்டு பேரையும் யாரும் தேட மாட்டாங்க! இந்த பாகி எரும வேணும்னா அய்யோ அம்மான்னு ரெண்டு சவுண்ட் விட்டுட்டு இருக்கும். கல்யாணம் பண்ணிக்க சொல்லி அடம் பிடிச்சத ஏம்மா இப்போ பேசி ஃபீல் பண்ணிட்டு இருக்க? கொஞ்சம் பார்வெர்டு திங்கிங்கோட இரு! நான் நம்ம ஜீனியரை ப்ளே ஸ்கூல்ல சேர்க்குற அளவுக்கு பில்டப் பண்ணிட்டேன். நீ இப்போ பார்த்து ஜெர்க் அடிச்சன்னா பண்ணையாரு மறுபடியும் முதல்ல இருந்து நமக்கு க்ராண்ட் வெட்டிங்னு ஆரம்பிச்சுடுவாரு, பை த வே இனியா ப்ரெக்னென்டா இருக்காளாம், இப்போ தான் பிக்பாய் மெசேஜ் பண்ணியிருந்தான். நாளைக்கு, இல்ல நாளைக்கு மறுநாள் நீ ஃப்ரீயா இருக்கும் போது அவளுக்கு விஷ் பண்ணி மெசேஜ் பண்ணிடு!" என்று சொல்லி விட்டு பாதையைப் பார்த்து வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவனிடம்,

"எங்க நந்து போறோம்? பூம்பாறைக்கா? எல்லாரும் வீட்டுக்கு வந்துருக்காங்க. இப்போ போய் எதுக்கு நம்ம ரெண்டு பேரு மட்டும் அங்க போகணும்? இன்னோரு தடவை தாத்தா வீட்டுக்கு வரலாம்ப்பா!" என்று சொன்னவளிடம்,

"........ஷ்ஷ்ஷ்! உன் கிட்ட ஏதாவது சஜஷன்ஸ் கேட்டா மட்டும் தான் வாயைத் திறக்கணும். அது வரைக்கும் எதுவும் பேசக்கூடாது!" என்று சொல்லி விட்டு அவன் அதற்கு மேல் அவளிடம் ஒன்றும் பேசாமல் இருந்து விடவும், கவிப்ரியாவிற்கு சற்று ஏமாற்றமாக இருந்தது.

இவ்வளவு தெளிவாக அவளது மனதை அவனிடம் உணர்த்தி ஆகி விட்டது! ஆனால் இதற்கு மேலும் அவன் தன் கம்பாட்டிபிளிட்டி கேமை பிடித்துக் கொண்டு தொங்கத் தான் போகிறானா என்று அவளுக்கு கோபமாக வந்தது. அவனிடம் பித்தான அவளது காதல் கொண்ட மனது இப்போது அவனது அணைப்பிற்கும், அருகாமைக்கும் ஏங்கத் துவங்கியது. ஆனால் அவன் மனதில் அப்படியெல்லாம் ஒன்றும் மாற்றம் ஏற்படவில்லை போலும். வழக்கமான அவன் இயல்புக்கு மாறாக சற்று இறுக்கத்துடன் தான் இருந்தான்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ