💟 ஜீவாமிர்தம் 36

1.9K 122 17
                                    

இடது கை பழக்கம் உள்ளவர்கள் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர். இடது கை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்கிறார்கள். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள். தனித்துவமான போக்கினைக் கொண்ட இடது கை பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகத்துக்கும் தகவல்களை விரைவில் பரிமாறிக் கொள்ள முடியும். நுட்பமான பணிகளை மேற்கொள்வதிலும், விளையாட்டுத் துறையிலும் முன்னிலையில் இருப்பார்கள். விவாதத் திறனும், விமர்சன ஆற்றலும் மிக்கவர்களாக இருப்பார்கள் என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

"கவி நீங்க எப்படி இங்க? என்னை ரொம்ப தேடிட்டீங்களா? விஜி மிஸ்ட்ட அட்ரஸ் வாங்குனீங்களா.... வெளியிலயே நின்னுட்டு இருக்கீங்களே? உள்ள வாங்க கவி!" என்று முகம் மலர்ந்து வரவேற்பு அளித்து சில கேள்விகள் கேட்டவளது வலது கை தொட்டிலில் தொங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து பார்கவ் பதறி விட்டான். விறுவிறுவென அவள் அருகே சென்றவன் அதே வேகத்துடன் ஆரம்பித்து விட்டான்.

"அறிவுன்னு ஒண்ணு இருக்காடீ உனக்கு? எங்க போய் விழுந்து வாரி கைய உடைச்சு வச்சுருக்க.....? இதுக்கு தான் அந்த மிஸ் அவ்வளவு க்ளாஸ் எடுத்துச்சாக்கும்..... ஏதாவது பிரச்சனை வந்தா ஒரு போன் பண்ண தெரியாது? ஏன்டீ என் உயிரை வாங்குறதுக்குன்னே லவ்வரா வந்து பொறந்து தொலைச்ச..... உன்னை முழுசா பார்க்குற வரைக்கும் என்னென்ன இமாஜினேஷன் மூளைக்குள்ள ஓடிட்டு இருந்தது தெரியுமா? தேங்க் காட் அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகல!" என்று பொரிந்து தள்ளிய படி அவளை மெதுவாக அணைத்துக் கொண்டவனின் மார்பில் தலைசாய்த்து வாகாக ஒண்டிக் கொண்டிருந்தாள் அபிநயசரஸ்வதி.

"நான் பொறக்கும் போது உங்க லவ்வராகி உங்க உயிரை வாங்குவேன்னு எனக்கு தெரியாதுல்ல கவி....அப்பவே எனக்கு தெரிஞ்சுருந்தா அக்காவும், தங்கச்சியும் மட்டும் போதும், நடுவுல நான் வேண்டாம்னு எங்கம்மாட்ட சொல்லி இருப்பேன். என்னமோ இமாஜின் பண்ணினேன்னு சொன்னீங்களே... என்னைய எங்க வீட்ல இருக்கிறவங்க விஷத்தை வச்சு கொல்ற மாதிரியா? இல்ல குழிக்குள்ள தள்ளி மூடி வைக்கிற மாதிரியா?" என்று கேட்டவளிடம் எரிச்சலுடன்

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now