💟 ஜீவாமிர்தம் 71

1.8K 95 8
                                    

இரவு ஆனந்த ஸாகரத்தில் நிர்மலா ஜெய் நந்தனிடம் எரிந்து விழுந்து கொண்டு இருந்தார். "வீட்ல என்ன பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு? இப்போ டார்சன் பார்க்குறது ரொம்ப முக்கியமா போச்சா உங்களுக்கு? நீங்களே ஒரு மினி டார்சன் தானே..... யானைய காட்டுறேன், சிறுத்தைய காட்டுறேன், காட்டெருமைய காட்டுறேன்னு சொல்லி எப்போ பார்த்தாலும் நம்மள ஒரு பீதியிலயே வச்சிருக்கிறது; இதுல படம் வேற பார்க்கணுமாக்கும்! அதை ஆஃப் பண்ணிட்டு என் பக்கத்துல வந்து உட்காருங்க. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்!" என்ற சொன்ன மனைவியின் சொல் தட்டாமல் தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்து விட்டு நிர்மலாவின் அருகே வந்து அமர்ந்து கொண்டு அவரை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டு இருந்தார் ஜெய் நந்தன்.

"இப்பல்லாம் எதுக்கு எடுத்தாலும் என்னைய திட்டிட்டே இருக்க நிலாம்மா.... இதெல்லாம் சரியில்லை. எல்லாம் ஹாப்பியா செட் ஆகி ஸ்மூத்தா போயிட்டு இருக்கு. இப்ப உனக்கு மட்டும் தனியா எங்க இருந்து பிரச்சனை வந்துருச்சு பஞ்சு மூட்டை?" என்று கேட்ட தன் கணவனிடம் ஆழ்ந்த ஒரு மூச்செடுத்து விட்டு,

"உங்கள அஃபெக்ட் பண்ணலன்னா அது உங்க கண்ணுக்கு பிரச்சனையாவே தெரியாது. எல்லா பிள்ளைங்களுக்கும் பார்த்து பார்த்து எல்லாம் செஞ்சுட்டு நம்ம புள்ளைய மட்டும் நீங்க கண்டுக்கவே மாட்டேங்குறீங்க, அவனுக்கு ரிச்சுவல்ஸ் கூட நம்ம அரேன்ஜ் பண்ணல, ரெண்டும் பிஸினஸ பார்க்குறேன் பார்க்குறேன்னு போயிட்டு போயிட்டு வந்துட்டு இருக்குங்க. நம்ம நடத்துற தொழிலை எல்லாம் சரி பண்றதுக்கு உங்களுக்கு என் மகனும், மருமகளும் தான் கிடைச்சாங்களா? கவிம்மா முகம் எந்நேரமும் ஒரு யோசனையிலயே இருக்கு. என் வயித்துல பொறந்த எரும அது ஒண்ணையும் கண்டுக்காம பண்ணையில நம்ம கன்னுக்குட்டி சிந்து பின்னாலயே போய் விளையாடி அதுக்கு முத்தம் குடுத்துட்டு திரியுது. எனக்கு தெரியாது, அவங்க ரெண்டு பேரும் லைஃப்ல அடுத்த லெவலுக்கு எப்போ போகப் போறாங்கன்னு நாளைக்கு காலையில டீடைம்ல நந்து கிட்ட பாலிஷ்டா பேசிடுறீங்க அத்தான்.....!" என்று சொன்ன தன் மனைவியிடம் எந்த பதிலும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார் ஜெய் நந்தன்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ On viuen les histories. Descobreix ara