💟 ஜீவாமிர்தம் 69

2.2K 120 14
                                    

அனைவரும் ஆனந்த ஸாகரத்தில் இருந்து புறப்பட்டு அவரவர்கள் வாழ்க்கையில் பொருந்தி மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. ஜெய் நந்தன், நிர்மலா, விவேக் மூவரின் தனிமை உணர்வும் ஜீவானந்தன், கவிப்ரியாவால் வலுவாக அடித்து விரட்டப்பட்டது. தன் டார்லிங்கின் எஸ்ஜேஎன்னை கையில் எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி வீட்டில் அனைவரது விருப்பத்திற்கும் கட்டுப்பட்ட கவிப்ரியா ஒரு நாளில் சுமார் பதினைந்து மணி நேரத்தை எஸ்ஜேஎன்னில் கழித்து இரண்டே மாதங்களில் விவேக்கையே அசர வைத்து விட்டாள், ஆனால் இவர்களின் விளையாட்டில் பெரும்பாடு பட்டுப் போன ஒரு பரிதாபகரமான ஜீவன் கவியின் கணவன் தான்...... இரவில் அவன் அரை உறக்கத்திற்கு செல்லும் வேளையில் தான் அவர்களின் அறைக்குள் கவிப்ரியா உள்ளே நுழைவாள். காலையில் அரை உறக்கத்தில் புரண்டு கொண்டு இருக்கையில் குட்மார்னிங் நந்து என்று சொல்லி அவசரமாக அவன் நெற்றியில் முத்தமிட்டு விட்டு பணிக்கு கிளம்பி இருப்பாள். நிர்மலா இப்போது பண்ணை மற்றும் ருசியின் பொறுப்புகளில் இருந்து ஒதுங்கி கொண்டதால் தனது மகனையும், மருமகளையும் மூன்று வேளை வயிறார உண்ண வைப்பது தான் அவரது தலையாய கடமையாக இருந்தது.

பண்ணையில் இசக்கி ராசுவின் ஆலோசனைகள் விவேக்கினால் நிறை குறை ஆராயப்பட்டு, ஜெய்நந்தனால் அங்கீகரிக்கப்பட்டு, ஜெயந்தன் பத்மாவினால் அனுமதிக்கப்பட்டு செயல் வடிவம் பெற்று அதன் பணிகள் நிறைவடைந்திருந்தன. நிர்மலா வரும் முன்பு பூக்காடாக இருந்து, பின்னர் நிர்மலாவின் கைவண்ணத்தில் காய்கறிப் பண்ணையாக உருமாற்றம் அடைந்து, அடுத்த வளர்ச்சியாக பசுக்களும் வளர்க்க ஆரம்பித்து, இப்போது அந்த பசுக்களை கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் பணியும் மேற்கொள்வதை நினைத்து பார்த்த ஜெய்நந்தன் ஒவ்வொரு தருணத்திலும் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று உணர்ந்து கொண்டார். அடுத்ததாக வந்த பெரிய பிரச்சனை ஜீவானந்தனது உடை விஷயத்தில்....... வீட்டில் அன்னை, மனைவி, சகோதரிகள் முன் எப்போதும் ஷார்ட்ஸில் உலவி பழகியவன் பண்ணையில் வேலை செய்யும் பெண்களின் முன் அந்த மாதிரியான உடையுடன் சென்று நிற்பதற்கு விரும்பவில்லை. கவிப்ரியாவின் ஆலோசனையின் பேரில் ஸ்லிம் ஸுட், கர்லி, ஃபிட்டட் ஜீன்ஸ், ட்ராக் ஷுட் என முயற்சித்து விட்டு,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now