💟 ஜீவாமிர்தம் 20

2.3K 122 15
                                    

"ஜீவாக்குட்டி இப்போ தான்டா உன் சிரிப்பு அழகா இருக்கு. ரிலாக்ஸ்டா இருக்கியா......!" என்று கேட்ட தன் அத்தையின் முதுகுப்புறம் தன் முதுகை சாய்த்து அமர்ந்து கொண்டவன்,

"இதுக்கு மேல என்ன ஹாப்பினெஸ் வேணும் மீராக்குட்டி..... நம்ம மூக்கி கூட பழம் விட்டாச்சு. பேமிலியோட மிங்கிள் ஆகியாச்சு. அப்பா கிட்ட பண்ணையார் ஐயா சமாதானம் சமாதானம்னு பத்து தடவை சொல்லி சரண்டர் ஆகியாச்சு. இனியா, ராசு ப்ராப்ளம் மட்டும் தான் நம்மள லேசா டென்ஷன் ஆக்கிடுச்சு. பட் கலவைப்படுற அளவுக்கு பெரிய விஷயம் இல்ல. நம்ம மாப்பிள்ளை எஸ்டேட்டுக்கு வரும் போது கொஞ்சம் அவரை வச்சு கவனிக்கணும். அவ்வளவு தான். மற்றபடி மகாகனம் பொருந்திய திருவாளர் ஜீவானந்தன் அமைதியாக, ஆனந்தமாக, குதூகலமாக, உற்சாகமாக, நிம்மதியாக இருக்கிறார். இப்போதைக்கு எந்த விதமான நச்சரிப்பும் இல்லாம இருக்கு. சொல்லி வாய் மூடல. அதுக்குள்ள வந்துடுச்சு பாரு நச்சரிப்பு...... வேற இடமே இல்லையா; ஏன்டீ என் மடியில வந்து உட்காருற?" என்று கேட்ட படி கவியின் மூக்கைப் பிடித்து ஆட்டியவனை பார்த்து புன்னகைத்த கவிப்ரியா,

"உங்கத்தை கிட்ட  நீ கொஞ்சிட்டு இருக்க. அது தான் உன் மடியில நான் உட்கார்ந்து கொஞ்ச வந்தேன். என் ரூமுக்கு வா. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்! அம்மா உங்களுக்கு ஓகே தானே?" என்று கேட்ட தன் மகளிடம்,

"கவிம்மா இன்னும் நீங்க சின்ன குழந்தைங்க கிடையாது. இனிமே  பெர்மிஷன் எல்லாம் கேக்க தேவையில்ல. உங்களுக்கு குடுத்திருக்கிற சுதந்திரத்தை நீங்களே தான் சரியா பயன்படுத்திக்கணும். போய் பேசுங்க! ஜீவாம்மா பாகி அந்த ராசு பத்தி உங்கிட்ட ஏதோ பேசணும்ன்னு சொன்னான் கண்ணா. ராம் மாமா வீட்டுக்கு நீ போறியா? பாகியை இங்க வரச் சொல்லவா?" என்று கேட்ட தன் மீராத்தையிடம் சலித்துக் கொண்டு,

"எனக்கு கவிம்மா கிட்ட நிறைய பேசணும் மீராத்தை. அந்த நல்லவனை எல்லாம் இப்ப கூப்பிடாத. உன்னதம் ஃப்ராபிட், சஹாயன் பேலன்ஸ், ராசு மேட்டர்ன்னு எல்லாத்தையும் பேசி என்னை சாவடிப்பான். அஜு மாமா வந்தா சாப்பிட மட்டும் கீழே கூப்பிடு. வேற எதுக்கும் என்னை கூப்பிடாத. அம்மா ஏதேதோ நிறைய ஐயிட்டம்  உனக்கும், கீதா அத்தைக்கும் குடுத்து விட்டுருக்காங்க. எடுத்து வச்சுக்க. நான் ஊருக்கு கிளம்பும் போது கீது அத்தைட்ட கரெக்டா அட்டெண்டென்ஸ் போட்டுட்டு கிளம்பிடுறேன்!" என்று சொல்லி விட்டு மாடிப்படிகளில் ஏறினான் ஜீவா.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now