💟 ஜீவாமிர்தம் 32

2.2K 137 19
                                    

வெளியே சென்ற தன் மகனையும் மருமகளையும் காணவில்லை என்று பதறிய ஜெய் நந்தனை நிர்மலா சிரிப்புடன் அமைதிப்படுத்திக் கொண்டு இருந்தார்.

"ஏய் பஞ்சு மூட்டை..... மணி பன்னிரண்டு ஆக பத்து நிமிஷம்டீ; அப்போலேர்ந்து நானும் கேட்டுட்டு இருக்கேன். நீ கைய கைய காட்டுற! ஆனந்த் எங்க தான் போயிருக்கான்?" என்று சற்று கோபத்துடன் கேட்டவரிடம்,

"அவன் தான் உங்களை மாதிரியே என் பியான்சியோட நான் ஊர் சுத்துவேன்னு சொல்லிட்டு போயிட்டான்ல ஸ்ரீ; அர்ஜுன் அண்ணாவே அதை காஷுவலா எடுத்துட்டு படுக்க போய்ட்டாங்க, நீங்க ஏன் இப்படி உருட்டிக்கிட்டு இருக்கீங்க.... தூக்கம் வரலைன்னா ஒண்ணு செய்றீங்களா?" என்று கேட்ட தன் மனைவியிடம்,

"செய்யலாமே.... என்னடா செல்லம் செய்யலாம்? நீ குட்டி சக்தி முத்து வந்ததுலேர்ந்து என் பக்கத்துலயே வர மாட்டேங்குற; இன்னிக்கு வேணும்னா பேபீஸ வெளிய விட்டுட்டு வந்துரட்டுமா?" என்று கேட்டவரிடம்,

"அது உங்க பாடு மிஸ்டர் நந்தன்.... கொஞ்ச நாளா அதாவது மிஸ்டர் ஜீவானந்தன் இங்க வந்ததுலேர்ந்து நீங்க மிஸ் ஷைலஜாவை சரியா கண்டுக்கறதில்லையாம். அந்த மேடம் எங்கிட்ட கம்ப்ளையிண்ட் பண்ணியிருக்காங்க. ஸோ போய் அவளுக்கு சோப் போடுங்க. இதோ விவேக் வந்துட்டாங்க பாருங்க!" என்று சொன்னார் தன் கண்களை கசக்கி கொண்டு.

மருத்துவமனையில் இருந்து வந்தவுடன் தன் அண்ணன் அண்ணியிடம் மாணிக்கத்தின்  நிலைமையை தெரிவித்த விவேக், மாணிக்கத்திற்கு இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், இன்னும் இரண்டு வாரங்களுக்கு அவரை மருத்துவரின் கண்காணிப்பில் வைத்து இருக்க சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லி விட்டு இனியாவின் அருகே சென்று நின்றார்.

ராசுவிடம், "நீ இன்னும் கிளம்பலையா?" என்று அவர் கேட்க ஜெய் நந்தன் விவேக்கிடம்,

"என்னடா விவேக்...... மாப்பிள்ளையோட மாலையும் கழுத்துமா நிக்குற நம்ம லட்டுவுக்கு அதை நீ பார்க்கணும்ன்னு ஆசையா இருக்காதா? சீக்கிரமே நீ வந்துருவன்னு எதிர்பார்த்தேன். நீ வர லேட் ஆனதால மாப்பிள்ளைய நான் தான் காலையில கிளம்பிக்கலாம்ன்னு சொல்லி நிறுத்தி வச்சேன்!" என்றார் சற்று வருத்தத்துடன்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now