💟 ஜீவாமிர்தம் 40

2.1K 129 30
                                    

திருமண மண்டபத்தில் கூட்டம் எல்லாம் குறைந்து மணமக்கள் சாப்பிட்டு வந்து சாவகாசமாக சற்று நேரம் அமர்ந்த பிறகு கடைசி ஆளாக வந்து திருமண வாழ்த்து தெரிவித்து தன் அத்தை மகன் பார்கவ் மற்றும் அபியிடம் கைகுலுக்கிய ஷைலஜா அவனிடம் ஒரு கவரை நீட்டினாள்.

முறைப்புடன் அவளை நோக்கி, "என்னதுடீ இது?" என்று கேட்டவனிடம்

"நீ எனக்கும் இனியாவுக்கும் அப்பப்போ குடுத்த பாக்கெட் மணி பாகி அத்தான்; என்னைய உனக்கு பிடிக்காத மாதிரி நான் குடுக்கற கிப்டையும் உனக்கு பிடிக்காம போயிடுச்சுன்னா..... அது தான் அப்பாட்ட கேட்டு பணம் வாங்கிட்டு வந்தேன். எவ்வளவு இருக்குன்னு தெரியல. ஜீவா அண்ணாவும் உனக்கு எதுவும் செய்ய முடியலையே.... அதனால இதை வச்சுக்க; ஹேப்பி மேரீட் லைஃப் அத்தான் & அபி அக்கா ஒன்ஸ் அகெயின்!" என்று சொன்னவளிடம்,

"விஷ் பண்றேன்னு வந்து நின்னு கிறுக்குத்தனமா உளறிட்டு இருந்தன்னா நான் உங்க அப்பாட்ட அறை வாங்கினாலும் பரவாயில்லைன்னு உனக்கு ரெண்டு அறை வைப்பேன் பார்த்துக்க. உன்னை பிடிக்காதுன்னு நான் உங்கிட்ட சொன்னதா எனக்கு நியாபகம் இல்ல ரூபி, உன்னை கல்யாணம் பண்ணிக்குறத யோசிக்க முடியாதுன்னு தான் சொன்னேன். ஆனா அதை உன் மனச ஹர்ட் பண்ற மாதிரி சொல்லிட்டேன். ரொம்ப ஸாரி! கவி, நீ, இனியா மூணு பேரும் என்ன கிப்ட் வாங்கி தந்தாலும் ஓகே..... எனக்கு ரொம்ப பிடிக்கும், நீங்க மூணு பேரும் நம்ம பேமிலிக்கே கிடைச்ச சந்தோஷம் ரூபிம்மா....... மொய் எழுறத அளவுக்கு நீ இன்னும் பெரிய மனுஷி ஆகல. நான்  குடுத்த பாக்கெட் மணியை திருப்பிக் குடுக்குறாளாம், லூசு.... உன் அத்தானுக்கு இந்த பணத்தை வாங்குற மாதிரி சில்லறை ப்ராப்ளம் வரல, நல்ல கிப்டா வாங்கி நாங்க மலைக்கு வரும் போது ப்ரசெண்ட் பண்ணு, சாப்பிட்டியா?" என்று கேட்டவனிடம் சாப்பிட்டேன் என்று தலையை ஆட்டினாள் ஷைலஜா.

"இன்னிக்கு ராகினி ஆன்ட்டிக்கு ஏதோ  ஆப்பரேஷன் இருக்காம் ஸோ ஈவ்னிங் பவின் நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொன்னார், இப்படி அழுது வடிஞ்சுட்டு இருக்காதடா செல்லம், ஒரு ஹெல்ப் பண்றியா விவேக் மாமா ரொம்ப நேரமா எல்லாரையும் பார்த்து பார்த்து கவனிச்சுட்டு இருக்காங்க..... அவங்கட்ட ப்ளசிங்ஸ் கூட வாங்கிக்கல. நான் அவரை இங்க கூப்பிட்டேன்னு சொல்றியா?" என்று கேட்டவனிடம் புன்னகையுடன்,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now