💟 ஜீவாமிர்தம் 8

3.3K 147 50
                                    

"வட்ட வட்டமாக வானவில்லை வெட்டி குட்டி குட்டி மாலை ஆக்குவேன். புரவில் ஏறி நீயும் என்னை அள்ளிக் கொண்டால் மூச்சு முட்ட முட்ட சூட்டுவேன்.....ஷப்பா! இந்த கோலம் போடுற வேலையை எவன் தான் கண்டுபிடிச்சானோ.....!" என்று தனக்குள்ளேயே முணங்கிய படி கழுத்தில் படர்ந்த கூந்தலை இடக்கையை கழுத்துப்புறம் கொண்டு சென்று ஒதுக்கினாள் கவிப்ரியா. வழக்கமாக மீரா செய்யும் பணி, ஊரிலிருந்து அனைவரும் வந்து விட்டார்களென்றால் கவிப்ரியாவின் வசம் சென்று விடும். அதனால் தான் பாட்டுக்கு இடையே இப்படி கடுப்பு மொழிகளும் கவியின் வாயில் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் அதையறியாமல் அவள் மாமன் மகள் ஷைலு அவளருகில் வந்து நின்று இடுப்பில் கை வைத்து கொண்டு,

"ஏ.....கவிப்ரியா அக்கா; என்ன இவ்வளவு ஹேப்பியா ஸாங் ஹம் பண்ணிட்டு இருக்க? இன்னும் ரெண்டு நாளாவது ரூமை பூட்டிட்டு அழுதுட்டு இருப்பன்னு நினைச்சோம்!" என்று கேட்ட படி அவளருகில் வந்து குத்துக் காலிட்டு அமர்ந்தாள்.

"ஏய் குட்டை கொக்கே; நான் எதுக்குடீ அழணும்? என் மச்சான் கிட்ட நான் பேசி பல வருஷம் ஆச்சு. ஆனாலும் எனக்கு என்ன பிடிக்கும்ன்னு, என்னோட டேஸ்ட் எப்படி இருக்கும்ன்னு கரெக்டா தெரிஞ்சு எழுதியிருக்கான் பாரு, எல்லார் கிட்டயும் என்னை அவனுக்கு எவ்வளவு பிடிக்கும்ன்னு சொல்லாம சொல்லிட்டானே....... நான் கேம்ல தோத்துட்டேன் தான்!  தனியா அவன் என் கையில சிக்கறப்போ அதுக்கு இருக்கு ட்ரீட்மெண்ட்! ஆனா நேத்து உண்மையிலேயே எனக்கு கோபமெல்லாம் வரல. என்னமோ உங்கண்ணன் எனக்கு பயப்படுறேன்னு ஸீன் போட்டதுல சிரிப்பு தான் வந்தது. சிரிச்சா ரெண்டு பேரும் ரொம்ப ஆடுவானுங்கன்னு தான் ஒரு லுக் விட்டேன். ஓடிப் போயிட்டானுங்க..... இல்லன்னா அந்த நேரம் உங்க அண்ணனை என்ன பண்ணியிருப்பேன்னு தெரியுமா?" என்று கேட்டவளிடம்,

"என்ன பண்ணியிருப்ப? ஏதாவது கம்ப்ளைன்ட் பண்ணி அழுதுருப்ப! அவன் அப்பா கிட்ட இல்லன்னா மாமா கிட்ட ரெண்டு திட்டு வாங்கியிருப்பான்!" என்று சொன்ன ஷைலஜாவிடம்,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now