72. மழையும் மங்கையும்

104 8 24
                                    

💞 மழை நேரத்து மாலையில்
மங்கையவள் முகம் காண
மகிழ்ச்சியாய் ஓர் காத்திருப்பில்
தனியாய் நான்..

மங்கையவள் வருவாளா? இல்லை
வானவள் மழை தருவாளா? என்ற
சிறு தவிப்பிலே நான்..

என் தவிப்பில் நிமிடங்கள் கரைய
சில்லென்ற காற்று
மெலிதாய் என் மேனி தடவ
சாரல் வந்தென்னை
செல்லமாய் அணைக்க
அப்போது தான்,
நிமிர் விழித்தேன் நான்
நின்று விட்டது நிமிடமும் கூட
நின் கண் முன் நிகழ்ந்த
அவள் வருகையில் கொஞ்சம்..

மங்கையா இவள்
வான் மழையா இவள்
அவள் வருகையில் மாறுமோ
காலநிலையும் கொஞ்சம்..
அடடா மாறுதே
என் கண் முன்னே
வானிலையும் கொஞ்சம்..

வானவள் தன் வெண்மேக
கன்னங்களை மறைத்து
கருமேக கன்னங்களை
காட்டி விட்டாள் பொறாமையில்
அவள் நெஞ்சம்..

என்னதான் செய்ய
அவளும் பெண் தானே
வடித்து விட்டாள் ஆரவாரமாய்
கண்ணீரை கொஞ்சம்..

அப்படி,, மங்கையவளை
தழுவியது தான் தாமதம்
அ‌த்தோடு,,
அடங்கி விட்டாள் வானவள்
அ‌ப்படியே,,
மங்கையவள் காலடியில்
மழையாய் தஞ்சம்....😉

நனைகிறேன் நான்,
நிலா ரசிகன்

காகித கிறுக்கல் Where stories live. Discover now