12. நிலவும் நானும்

112 15 25
                                    

எட்டாத தூரத்தில் நீ
இருந்தாலும் உன்னை
ஏறெடுத்து பார்க்க
மறந்ததில்லை..😔

சற்றே நீ வர தாமதித்தாலும்
தாபங்கள் இன்றி
தவித்திருந்தேன்..😔

எப்போதும் உன்னையே
ரசித்திருந்தேன்..
நீ இல்லா இருளில்
உனக்காய் காத்திருந்தேன்..😔

நிலவாய் அல்ல
உன்னை நின் உயிராய்
நினைத்திருந்தேன்..😔

காரணங்கள் ஏதுமின்றி
என் மனதை கண்ணீரால்
கரைத்து கொண்டிருக்கிறேன்..😔

உன்னை எண்ணியே
உன் பெயரை உச்சரித்து
நிற்கிறேன்..😔

என்னை நீ மறந்ததன்
காரணம் தான்
என்னவோ??

மன்றாடி அழைக்கிறேன்
மைல்கள் கடந்து
மறைந்து விடாதே..😔

மறுகணமே மனதால்
நிரந்தர மறைவாய்
மரணத்தில் மகிழ்ந்திருப்பேன்..😔

நிலா ரசிகன்
இன்று உன் நினைவில்
மறைந்த நிழல்

காகித கிறுக்கல் Where stories live. Discover now