39. பேரழகி

97 9 7
                                    

💞 ஒரு பேரழகியைப் பற்றி
நினைவு கூறும் போது
சொற்கள் சிக்காமல்
எங்கோ சென்று
பதுங்கிக் கொள்வதேன்??

அவளின் பூ முகமும்
புன்னகையும்
பேசிய விதமும் நடையும்
ஒட்டு மொத்தப் பெண்மையின்
ஓருருவான தோற்றமும்
அவளை சிந்திக்கும் போதே
சிலிர்க்கச் செய்கின்றன..

அடி பெண்ணே கேள் உன்னிடம்
வியந்த ஒன்றை கூறுகிறேன்..

உன் நிழலும் கொஞ்சம்
நிறமேற்றிக் கொண்ட
அதிசயம் உலகத்தில்
உன்னிடம் மட்டுமே..
மௌனமாய் ரசிக்காமல்
ஒப்புக் கொள்..
உண்மையில் நீ
பேரழகி தான் என்று.. 🥰

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now