38. பெண் நிலவு

62 9 8
                                    

💕 நீளும் இரவின்
நீளத்தை ரசிக்கிறேன்..
சுழலும் கடிகாரத்தின்
ஓசையில் என் இதயத்தின்
ஒலியை கேட்கிறேன்..
தவழும் காற்றில்
தவித்து கிடக்கிறேன்..
உன்னை நினைத்து
ஊமையாய் சிரிக்கிறேன்.. 🤭

உச்சி முகரும் உன்
உஷ்ணத்தை உணர்கிறேன்..
நீ அருகிலிருக்கும்
அணைப்பை அறிகிறேன்..
இத்தனையும் ஒன்றாய்
கனவில் காண்கிறேன்..
கண் விழித்த பின்னே உன்னிடம்
தூது சொல்கிறேன்..😊

வான் நிலவு வடிவாய் இருக்க
உன் நிலவு இங்கே
உன் வருகை எண்ணி
தேய்ந்து போகிறேன்..🌘
வான் விழிக்கும் முன்னே
உன் நிலவின் முகம்
காண வாராயோ? 😉

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now