07. உனை எண்ணி

136 21 20
                                    

உனை மறந்து போகும்
மனமென்றால் அது
இறந்து போகட்டும்..

உனை காணாது போகும்
கனவென்றால் அது
கலைந்து போகட்டும்..

உனை நினையாது போகும்
நினைவென்றால்
அது நினைவிலே
தொலைந்து போகட்டும்..

உனை பார்க்காது போகும்
விழியென்றால்
அது பார்வை
இழந்து போகட்டும்..

உனை சேராது போகும்
உயிரென்றால் அது
உயிரிழந்து போகட்டும்..

உனை பிரிந்து போகும்
நாளென்றால் அது
என் வாழ்விலே
விடியாமல் போகட்டும்..😔

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now