காவல்

137 34 59
                                    



காவல்இனம் காக்கும்தினம்; பாராட்டனும்.
ஆனாலினும் அங்கேதினம் தீயஇனம்
தீமைதினம் புரியும்கணம் மாண்புஎனும்;
காவல்இனம் கானபுகழ் அழித்துவிடும்.
உயிர்துச்சம் உயர்தியாகம் எனவாழும்
மேன்மக்கள் மெய்யெனவும் ஒப்புக்கனும்.
கரைகையும், கல்நெஞ்சும் இதுவழக்கம்;
குறைசெய்யும் குறுமக்கள் குறைநெஞ்சம்
இருப்பதையும் மெய்யெனவும் ஒப்புக்கனும்.
கீழ்மக்கள் தீங்கிழைத்தால் சாடிடனும்;
தனிமிருகம் அதுசெய்யும் தீங்கிற்கும்
அகிலஇனம் அதைசாடிடும் பணிசெய்தால்;
மனிதஇனம் மனிதத்தனம் மறந்தேவிடும்.




               விளக்கம்:

இன்று தனிசில நபர்கள் செய்த தவறினால் நம்மில் சிலர் மொத்த காவல்துறையையும் குறை கூறுகிறோம். 100 நபர்கள் ஒரே துறையில் இருந்து அதில் 99 நபர்கள் தீயவர்களாக இருப்பினும் அந்த 99 நபர்களை சாடலாம் ஆனால் மொத்த துறையையும் அவமதிப்பது மீதம் உள்ள அந்த நல்ல இதயத்தை காயப்படுத்துவதோடு இல்லாமல் அவர் நல்வழியில் வாழ்க்கையை நடுத்த தடையாகவும் இருக்கும்.

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now