தொலைக்காட்சி விளம்பரமும் நுகர்வோர் அறியாமையும்

154 44 26
                                    



வண்ண வண்ண விளம்பரத்தால்
சின்னஞ்சிறு சிறுவரெல்லாம்
அழுது வாங்கும் தீனிகளோ
விழுந்து போன மயக்கத்தில்
உண்மை இல்லா உண்மைகளால்
கண்மயக்கம் செய்த பாவமே.

அறிவு குறைந்த அகவையிலே
தெளிந்த புத்தி இல்லாமல்
பிஞ்சு அழகு குழந்தைகள்
நஞ்சை கேட்டு வாங்குதே

அஞ்சி கொள்ளும் நோயையெல்லாம்
கெஞ்சி கேட்டு வாங்குதே
பஞ்சு போன்ற குடலெல்லாம்
பிஞ்சு போக கெடக்குதே.

வளர்ந்து தெளிந்த பெரியோரும்
விளம்பர பேயதன் விலக்கல்லவே
வார்த்தை வலிமை அதில்மயங்கி
வாழ்க்கையில் நலத்தை இழந்தனரே.

உணவின் தரத்துக்கு எதுசாட்சி?
உலகில் உண்மையில் எதுமாட்சி?
செத்து மடியும் சிறுவர்களை
நித்தமும் காட்டா தொலைக்காட்சி
உணவின் தரத்துக்கு இதுவா சாட்சி?

கள்ளி பாலால் பெண்களை கொன்றோம்-இன்று
பாக்கெட் பாலால் அனைவரும் மாய்கிறோம்.

சொல்லும் கட்டளைக் கடிமையாகி
செல்லம் குடுத்து வாங்கினோமெனில்,
உயிருக்கு ஒருநாள்  விலைபேசி
நீஇறந்ததை ஒருவன் மறைப்பான்
அவன்தான் கார்ப்பரேட் முதலாளி.


சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now