கண்ணம்மா💙💙

194 55 49
                                    

கண்கள் கதைகோடி சொல்ல
நெஞ்சம் உனையேங்கி போக
காதல் குறையின்றி ஏற
செல்லம் அளவின்றி கொஞ்ச
உள்ளம் உமதாகி போக

கண்ணோடு கண்ணும் பார்க்க
வண்ணத்துப் பூச்சி பறக்க
நெஞ்சோடு இதை உணர
மூக்கோடு மூக்கு முட்ட
சூடாக சுவாசம் மாற
நெஞ்சோடு நெஞ்சனைத்து
இதழோடு இதழ் கோர்க்க
வேண்டுமடி கண்ணம்மா -நீயெனக்கு
வேண்டுமடி கண்ணம்மா

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now