(tribute to real heroes ). *யார் இவன்.....?*

141 56 72
                                    

யாரிவன் ......
யாரிவன்.....

இவன் ...
எந்தன் நாட்டிலே
எல்லைக்கோட்டிலே
என்னைக்காத்திடும்
எந்தன் நாயனே

இவன்...
சுமைகளை தாங்கி
சுவைகளை மறந்து
சிரிப்பதை ஏங்கிடும்
சிறு வீரனே

இவன்...
குருதி் சகஜமென
குடும்பம் கனவென
குழந்தை காணலென
குழம்பிடும் வீரனே

இவன்...
மாயும் வேளையில்
மயங்கிய நிலையில்
மார்பை காட்டும் மானங்கொண்டவனே

இவன்...
வீழ்ந்தாலும் விதையாகி
விதை வானுயரெட்டி
விண்ணை ஆளும்
வீரம் கொண்டவனே

நல்லவர் தீயவர்
யாவரையும்
காத்திடும் இறைவர்
வழிஇவனும்
சேவை செய்யும் உயர்ந்தவனே.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now