தமிழ்

451 141 143
                                    


                                                                                                                                  
வாழ்த்தி இறைவனைப் போற்றி எதையும் தொடங்கும் மொழி,
வாழ்வதற்கும் இலக்கணம் வகுத்த முத்தமிழ் முதல் மொழி,
வானத்தில் பறக்கும் வரலாற்றை உடைய முதல் மொழி,
வானிலையை அக்காலத்தே அறியும் அறிஞர்கள் உடைய மொழி,

அது பிற மொழிக்கு தாய்மொழி,
மற்றவைக் காட்டிலும் உயர் மொழி,
ஆதலால் அடைந்தது செம்மொழி,
இதுவே நமது தமிழ் மொழி,

எட்டுத்தொகை நூல்கள் உடைய மொழி,
எட்டாச் சிறப்பினை உடைய மொழி,
பத்துப் பாட்டினை  உடைய மொழி,-அதில்
பதுங்கி இருக்கிறது நேர்வழி,

ஐம்பெருங்காப்பியம் உடைய மொழி,
ஐம்பூதத்தையும் ஆளும் மொழி,
பல்லாண்டு வாழும் மொழி,
பண்பாடு பல கொண்ட மொழி,

தொல்காப்பியத்தை உடைய மொழி,
தொன்மையுடன் என்றும் விளங்கும் மொழி,
அகத்தியத்தை உடைய மொழி,
அழகுடன் என்றும் விளங்கும் மொழி.

திருக்குறளை உடைய மொழி ,
தேனின்பத் தமிழ் மொழி.

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now