கொள்ளையன் கொல்லப்பட்டான்

58 16 25
                                    


கோவிட் தொற்றால் இந்த உலகமே பிரிந்து உடைந்து இருக்கிறது. இருப்பினும் சோகத்தில் மூழ்கிவிடாமல் நம்பிக்கை ஊட்டவேண்டும் என்ற ஓர் எண்ணத்தின் குழந்தையாக வந்தது தான் இந்த கவிதை! உலகத்தின் இந்த கொரொனா நோயின் இறுதி நோயாளி குணமடைந்தபின் official ஆக இந்த உலகில் இருந்து கோவிட் ஒழிந்தது! என்ற செய்தியைக் கேட்டு ஒரு கவிஞன் எழுதுவதாக ஒரு கற்பனை கவிதை...

*கொள்ளையன் கொல்லப்பட்டான்*

அழகினி தானாக மலருதோ!

பலதுயர் தானாக வாடுதோ!

இருவிழி காணாத இன்பமோ!

மழையது தேனாக(க்) கொட்டுதோ!

கடலென(ப்) பாரிலே விரியுதோ!

தீங்கிது தீராமல் பிரியுதோ!

இனிபுது சீறாவாய் பிறக்குதோ!

துயரது காணாமல் தொலைந்ததோ!

பிணியினி தாக்காமல் இருக்குமோ!

இருகரம் தயங்காமல் கோர்க்குமோ!

நட்புடன் ஆடாத ஆட்டமோ!

புஜங்களும் தாலாட்டு பாடுமோ!

இடைவெளி நீங்காது இருகுமோ!

புதிதொரு பாராக(த்) திரிந்ததோ!

பழைய இன்பங்கள் கிடைத்ததோ!!!...




Author note: hi makkalae meendum rommba naal kalichu ungala santhikka vanthurken ungal sago. irunthalum unga support korayathu nra nambikkai epoyum irku. medical emergencies and career la irka important phases la irunthe so intha pkkam vara mudila elarum ipo vanthu intha updateauh samatha padichu commentla kaari thupuvengalamam. see you soon

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now