சுதந்திர உணர்வு

159 72 53
                                    





உயிர்நாடிகள் உயிர்காக்க நாடி
   உழைத்துப்பெற்றது சுதந்திரம்.
உயிரியின் அணுவெல்லாம்
   உவந்து உணர்வது சுதந்திரம்

சுதந்திரம் சொல்லல்ல உணர்வு

சுதந்திரம் எனும்
மந்திரம் அதன்
நிஜத்திரம் இழந்து
நிரந்தரமின்றி போக.....
சுதந்திர நாட்டில்,
சொல்லிற்கும்
சுதந்திரமில்லா
சுதந்திரம் வெறும்
சொல் அல்லவோ?

நமக்குயிரென
தம்முயிர் துறந்த
திருவோர் தந்த
சுதந்திரம் அதை
தெருவில் வீசி
அன்னியனுக்கு
அடிமைப்படுவதா?-இல்லை
அடைந்ததை
அளவறியாது
அனுபவித்து
அவமதிப்பதா?

இப்படிப்பட்ட சுதந்திரம்
எப்படிப் பார்ப்பினும்
உணர்வல்லவே.

சொல்லாக சுவைத்த
சதந்திரத்தை
உயிர் கொடுத்து
உணர்வாக்கி
சதந்திரத்தின் உன்மைச்
சுவையுணர்வோம்.








*சுதந்திர தின வாழத்துக்கள்*sagosss . Happya irungo😉😉😉😁😁

















சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now