தாயும் சேயும் நோயும்

131 37 62
                                    


ஊரடங்கால் பாதிக்கப்பட்ட உறவுகளிள் அதிகம் பாதிக்கப்பட்ட உறவாக எனக்கு பட்ட ஒரு உறவு என்றால் அது ஏழை தாய்-சேய் உறவு . செய்தியில் பார்த்த நெஞ்சை உலுக்கிய சம்பவம் கவிதை வடிவில்.........

-×-

       தாயும்-சேயும்-நோயும்

செய்தியொன்று செவியிலே
கேட்டு உள்ளம் நடுங்குதே
கையில் காசு இன்றியே
சேலை கிழிந்த நிலையிலே
ஏழை யான தாயவள்
சேயை ஒன்று தோளிலே
சுமந்து சுத்தி.... வந்தாளே...

நாடே அவளுக்கு நரகெனதெரிய
பேயாம் பசியால் பிள்ளைவாட
வெயிலில் உடம்பும் அனலாய்மாற
பிள்ளை தோளில் மயங்கிப்போக
உதவிக் கலைந்தாள்* ஏழைத்தாயோ
வீட்டில் மக்கள் விரையம்செய்ய
வீதியில் உணவை தேடியலைந்தாள்

குப்பைத் தொட்டி குடலைக்குமட்ட
அழுகிய பழமோ அமுதெனதெரிய
எட்டி எடுக்க எண்ணியபோது
சுத்திச் சன்னல் புகைப்படம்பிடிக்க
மானம் கையை கட்டுப்படுத்த
பிள்ளை பாசம் நெஞ்சையுலுக்க
மானம் மண்னென பிள்ளைக்காக
கையை நீட்டி பழத்தையெடுக்க...

சட்டம் சொல்லை கேளாகிருமிகள்
அதனால் அங்கே ரோந்துகள்சுற்ற
காவலர் ஒருவர் தடியுடன்துரத்த
வீசிய தடியோ பழத்தைபறிக்க

ஓடி ஒளிந்து தாயும்துடிக்க
தாயின் தோளில்.......
பிள்ளை பிணமானான்.....💔

ஓடி ஒளிந்து தாயும்துடிக்க
தாயின் தோளில்.......
பிள்ளை பிணமானான்.....💔

கண்ணி லேகுருதி வடிய
மார்பி லேயிறுகி அணைத்தாள்....

உறவிலே ஆயிரம் இருக்க
நிலைகள்ஏ தாயினும் இருக்க
தாயை போலுண்டோ உறவு?
செய்தி கேட்டுவந்தது தெளிவு
பலருக்கு,
வெளியில் வந்தால்நோயது கொல்லும்
வீட்டில் இருந்தால்வறுமை கொல்லும்
பிள்ளை இழந்தகண்ணீர் சொல்லும்
நிலை யென்னஇந்த நாட்டிலே
நூற்றி நாற்பத்திநான்கிலே யென்று......





Author's note:

*- உதவிக்கு + அலைந்தாள்

இந்த கவிதை எழுத எழுத இருமுறை அழுதேன் அதை குரல் பதிவு செய்கையில் ஒருமுறை அழுதேன்.
இதை ஒரு உணர்ச்சி மிக்க கவிதையாக மட்டும் பார்க்காமல் முடிந்தவரை ஏழை மக்களுக்கு உதவுங்கள்


இந்த கவிதைய நீங்க தவறான allignment la படிக்க நேரிடலாம் எனவே இந்த  drive link இல் நான் கவிநடையில் படித்து சேகரித்து வைத்துள்ளேன் நிச்சயம் ஒரு முறை கேளுங்கள்.

https://drive.google.com/file/d/1mxVO2TVanO0GloF24wzGzQHwxw7Xi67s/view?usp=drivesdk

நன்றி இப்படிக்கு

- உங்கள் சகோ

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now