💟 ஜீவாமிர்தம் 75

Start from the beginning
                                    

"நந்து இன்னும் நமக்குள்ள கம்பாட்டிபிளிட்டி டெவலப் ஆகலைன்னு நினைச்சு கோபமா இருக்கியா? காலையில எல்லாம் நல்லா தானே இருந்த, இப்போ ஏன் ஒரு மாதிரி ஸ்டிஃப்பா இருக்க! நான் எதுவும் தப்பா பேசிட்டேனா?" என்று கேட்டவளிடம் எரிச்சலுடன்,

"இந்த மாதிரி ரொம்ப பொலைட்டா எல்லாம் பேசாத. உன் கேரக்டருக்கு அது செட் ஆகவேயில்ல...... நீ நீயா இரு! எனக்காக உன் இயல்பை மாத்திக்குறேன்னு ஆரம்பிச்சு என் கூட சண்டை போடாம, கெத்தா ஒரு லுக் விடாம, கழுத்தை ஒரு வெட்டு வெட்டிட்டு போவியே அதெல்லாம் செய்யாம இருந்தன்னா நீ என் கேப்ஸி தானான்னு எனக்கு சந்தேகம் வந்துடும். நான் பாட்டுக்கு புலம்பிட்டு இருக்கேன். இப்படி சைடு லுக் விட்டா என்ன அர்த்தம்?" என்று கேட்டவனிடம்,

"ஒண்ணுமில்ல. நான் ஒரு கேள்வி கேக்க வந்தேன். நீ அத ஸ்கிப் பண்ற! உன்னை ஒரு லுக்கும் விடல, அமைதியா உட்கார்ந்து வர்றேன். போதுமா? டென்ஷன் ஆகாம பாதைய பார்த்து ஓட்டு!" என்று சொல்லி விட்டு தன் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு இருக்கையில் கண்மூடி சாய்ந்து விட்டாள் கவிப்ரியா.

அடுத்த இருபது நிமிடங்களில் தன் தாத்தாவின் வீட்டு காம்பவுண்டுக்குள் தன் வாகனத்தை செலுத்தியவன் தன் மனைவியை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

கணவனது கைகளில் இருக்கிறோம் என்று உணர்ந்த கவிப்ரியா, "தூங்கிட்டனா நந்து, எழுப்பி விட்டுருக்கலாமே.....டேய் டேய் என்னடா ம்ம்ம் ம்ஹூம்!" என்று வார்த்தைகளை முடிக்க முடியாமல் அவனது முத்தத் தாக்குதலில் சிக்கி அவனால் சில பல காயமடைந்து கொண்டு இருந்தாள்.

கணவனது கைகள் சற்று வேகத்தை கூட்டி அவளது மேனியை தழுவிய போது கவிப்ரியா அவன் மார்பில் சாய்ந்து கொண்டு சற்று யோசனையுடன் நின்று கொண்டு இருக்க அவளை தோளில் சுமந்து வந்து படுக்கையில் கிடத்தியவன் வீட்டின் கதவுகளை சாற்றி விட்டு மறுபடியும் அவளிடம் வந்தான்.

"ஏன்டீ மூக்கி உனக்கு நான் ஸர்ப்ரைஸ் குடுக்கணும்ன்னு பார்த்து பார்த்து எல்லாத்தையும் செஞ்சா, அப்பப்பப்பா வச்சியே எனக்கு ஒரு பிக் ஸர்ப்ரைஸ்..... எப்படி எப்படி ஜீவா தான் உன் ஜீவாமிர்தமாக்கும்...... புண்ணியவதி கல்யாணம் ஆகி நாலு மாசம் கழிச்சு இப்பவாவது நம்ம சின்க்குகுள்ள வந்தியே? ரொம்ப நல்லா இருப்ப!" என்று சொன்ன தன் கணவனை புரியாத பார்வை பார்த்து குழம்பிப் போய் அமர்ந்து இருந்தாள் கவிப்ரியா.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now