💟 ஜீவாமிர்தம் 73

Start from the beginning
                                    

"இன்னும் நீ என்னென்னவெல்லாம் நீ செய்யப் போறன்னு பார்க்க எனக்கு ரொம்ப ஆவலா இருக்குடா ஹல்க்!" என்று மனதிற்குள் நினைத்த படி புன்னகையுடன் வந்தவள் முன்னால் ஒரு பெரிய மலர்ச்செண்டு நீட்டப்பட்டது ஆர்யமாலாவால்.

"மா.... மா, மாலா நீங்க எங்க இங்க? எதுக்கு பொக்கே.... இன்னிக்கு என்ன ஸ்பெஷல்..... வீட்ல யாருக்கும் பர்த்டே
கூட இல்லையே?" என்று கேட்டு பூச்செண்டை வாங்கிக் கொண்டு கீழே வைத்தவளிடம் வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

விவேக் அவள் முன் வந்து நின்று, "இன்னிக்கு ஒரு பர்த்டே தான் கவி.... யாருக்கு என்னன்னு இந்த ஸ்க்ரீன்ல பாரு!" என்று சொல்லி விட்டு ஒரு வீடியோவை அவளுக்காக போட்டு விட்டு சென்று ஓர் ஓரத்தில் நின்று கொண்டார்.

ஜஸ்ட் ஃபார் மை லேடி கட்டிடம் வாங்கியதில் இருந்து, அதில் செய்த இண்ட்டீரியர் வொர்க், சென்னையில் அவளிலிருந்து கொண்டு வந்து காட்சிப்படுத்த உடைகள், அந்த ஷாப்பை அலங்கரித்த வேலைகள், புதுப் பொலிவுடன் நேற்று மாலை அனைத்து வேலைகளையும் முடித்த பிறகு கடையின் தோற்றம் என அனைத்தும் வீடியோவில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

கண்களை இறுக மூடித் திறந்து தன்னை சமனப்படுத்திக் கொண்டு இருந்தவளின் அருகில் வந்து, "ஆர்யமாலாவை உன்னோட வொர்க் பண்ண சென்னையில இருந்து இங்க கூட்டிட்டு வந்தது செகண்ட் ஸர்ப்ரைஸ்! என் பொண்டாட்டி இதத்தான் ஆசைப்படுறா, அத செஞ்சு குடுங்கன்னு எங்ககிட்ட கேட்டு உனக்கு பிடிச்சத உனக்கு தெரியாமலே உனக்காக குடுத்தது தேர்ட் ஸர்ப்ரைஸ்..... ஷாப்புக்கு போகலாமாடா ஏஞ்சல்?" என்று கேட்ட தன் மாமனிடம் பேச்சே வராமல் திகைத்துப் போய் தன் மாமனை இறுக்கமாக பற்றிக் கொண்டு தலையை மட்டும் அசைத்தாள் கவிப்ரியா.

"நிர்மலா ஏம்மா இந்த பங்ஷன்க்கு எல்லாரையும் கூப்பிடல......?" என்று கேட்ட அர்ஜுனிடம்,

"இல்லண்ணா இது கவிம்மாவுக்கு நம்ம நந்து பர்சனலா கிப்ட் பண்ண நினைக்கிற விஷயம், அவங்களுக்குள்ள இன்னிக்கு கொஞ்சம் எமோஷனலா நிறைய விஷயம் நடக்கலாம். அதனால தான் நம்ம மட்டும் போதும்ன்னு நினைச்சேன். ஆனா நீங்க சொன்ன ஸ்பெஷல் கெஸ்ட்டை மட்டும் மறக்காம கூப்பிட்டுட்டேன் அண்ணா!" என்று சொன்ன நிர்மலாவை அழைத்துக் கொண்டு அர்ஜூனும் மற்ற அனைவரும் நிர்மலாவின் வார்த்தைகளை ஆமோதித்து விட்டு கவிப்ரியாவின் கனவுப் பட்டறையின் திறப்பு விழாவிற்கு சென்றனர்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now