💟 ஜீவாமிர்தம் 70

Começar do início
                                    

"ச்சை ஒரு மனுஷன் பேசிட்டு இருக்கேன், பாதியில அப்ரப்ட்டா கட் பண்ணிட்டு போறியா நீ..... போ போ நான் பேச வேண்டியவங்க கிட்ட பேசிக்குறேன்!" என்று நினைத்தபடி அர்ஜுனுக்கு அழைத்தான் ராகவ்.

இரண்டு முறை கட் செய்தவர், மூன்றாவது முறையும் அவன் கூப்பிடவும் "க்ளாஸ்ல இருக்கேன் ராகவ். இன்னொரு டென் மினிட்ஸ்ல நானே கூப்பிடுறேன்!" என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.

கால் மணி நேரம் கழித்து அவர் அழைப்பு வந்ததும் ராகவ் அவரிடத்தில் புலம்பி தள்ளி விட்டான். யாரும் அவனை கண்டுகொள்ளவே இல்லை, கவிப்ரியாவின் கடை திறப்புக்கு தன்னை அழைக்கவில்லை என்று தன் பெரியப்பாவிடம் புகார் படித்துக் கொண்டிருந்தவனின் வித்தியாசமான மனநிலையை உணர்ந்தார் அர்ஜுன்.

"ராகவ் நீ இப்படி எல்லாம் எதையும் எக்ஸ்பெக்ட் பண்ற பையன் இல்லையே.... பொதுவா வீட்ல நடக்கிற பங்ஷன் எதுக்கும் என்னைய கூப்பிடாம நீங்களாகவே செஞ்சுட்டா ரொம்ப நல்லா இருக்கும்னு தானேடா எப்பவும் சொல்லுவ; இப்போ என்ன உன் பேச்சுல சடனா ஒரு சேன்ஜ் தெரியுது?" என்று கேட்ட தன் பெரியப்பாவிடம்,

"எனக்கு தெரியல அஜு; இவ்வளவு வருஷம் இல்லாம இப்போ தான் எனக்கு நம்ம பேமிலிய ரொம்ப மிஸ் பண்ற மாதிரி ஒரு ஃபீல் வருது. வொர்க்ல ஒழுங்கா கான்சென்ட்ரேட் பண்ண முடியல. இந்த மாதிரியெல்லாம் நான் இருந்ததே இல்ல. ரீசண்ட் டேஸா ஏதோ தப்பா இருக்கு!" என்றவனிடம் சிரிப்புடன்,

"எதுவும் தப்பா இல்ல; எல்லாம் சரியா தான் இருக்கு. இப்போ என்ன உனக்கு..... உங்க அக்கா பொட்டீக் ஓப்பனிங் செரிமனிக்கு உன்னை கூப்பிடணும் அவ்வளவு தானே? ஓகே ஃபைன். பெரியப்பா கூப்பிட்டுட்டேன். பங்ஷன்க்கு வந்துடு. அங்க என் ஸ்பெஷல் பிரெண்ட் ஒருத்தர் வேற வர்றாங்க. உன் மேல ரொம்ப கோபமா இருக்காங்கப்பா. உன்னால அவங்க வீட்ல செம மொத்து வாங்கிட்டாங்க போல, நீ வேற போகும் போது அவங்கட்ட சொல்லிட்டு கிளம்பலையாம். இந்த அகாடமிக் இயர் முடிஞ்சவுடனே பெரியப்பாவும் பெரியம்மாவும் மலைக்கு ஷிப்ட் ஆகப் போறோம். என் ஸ்பெஷல் பிரெண்ட் கொஞ்சம் அவங்க சப்ஜெக்ட்ஸ்ல இண்ட்ரெஸ்ட் இல்லாம இருக்காங்க. உங்க அக்கா அவ வேற நினைச்ச நேரமெல்லாம் எங்கள பார்க்கணும்ன்னு சொல்லிட்டு இருக்கா. ஸோ அவங்களுக்கு சிலபஸை இன்ட்ரஸ்டிங்கா சொல்லி குடுத்து பாஸ் பண்ண வைக்க ஹெல்ப் பண்றேன்னு ப்ராமிஸ் பண்ணி குடுத்துருக்கேன். அப்படியே கவியையும் பார்த்துகிட்ட மாதிரி ஆச்சு. கவிம்மா பங்ஷன்க்கு அவங்களும் வர்றாங்க. நீயும் வந்தன்னா கண்டிப்பா ஹெல்மெட், ப்ரொடெக்ட்டிவ் ஷீல்டு எல்லாம் போட்டுட்டு வா. அப்போ தான் வசதியா இருக்கும்!" என்று சொன்னவரிடம் ஒரு பெரிய நிம்மதி பெருமூச்சுடன்,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Onde histórias criam vida. Descubra agora