💟 ஜீவாமிர்தம் 66

Start from the beginning
                                    

"ஒவ்வொரு பொண்ணும் அவ பிறந்த வீட்ல இருந்து புருஷன் வீட்டுக்கு கிளம்புறப்போ இப்ப எதுக்குடா தேவையில்லாம அங்க போகணும்? பேசாம அம்மா அப்பா அக்கா அண்ணன் தம்பி தங்கச்சிங்க கூட இங்கயே இருந்துடலாமேங்கிற நினைப்பு ஒரு நிமிஷமாவது அவ மனசுல வந்துட்டு போகத் தான் செய்யும். ஆனா அந்த மாதிரி எண்ணம் தோணுதுங்கிறதுக்காக அங்க போகாம இங்கயே இருந்துட முடியாது இல்லையா..... புதுசா ஒரு சொந்தத்தை அடாப்ட் பண்ணிக்கும் போது புரிதல் இல்லாம ஏதாவது பிரச்சனை வர்றது சகஜம் தான், ஆனா அதெல்லாம் சரி பண்றதுக்கு தான் நம்ம ரூபி, இனியாம்மா கூடவே நம்ம மாப்பிள்ளைங்களும் இருக்காங்களே.... இனிமே உங்க பொண்ணுங்க கிட்ட கொஞ்சம் தள்ளி நின்னு பழகுங்க ஸ்ரீ! அப்போ தான் அவங்களும், நீங்களும் ஹேப்பியா இருக்க முடியும்!" என்று சொன்ன தன் மனைவியிடம் ஆச்சரிய பாவத்துடன்,

"ஏன்டீ கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா உனக்கு.... இவ்வளவு வருஷம் தூக்கி வளர்த்த பிள்ளைங்கள விட்டு தள்ளி நில்லுங்கன்னு இவ்வளவு அசால்டா சொல்ற.... உனக்கென்னம்மா உன் பையனும், ஏஞ்சலும் ஸப்போர்ட் பண்ணுவாங்க. இனிமே என் மார்னிங் டைம்ல லட்டுவையும் ரூபியையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன். என் மகள்களை மனசு தேடுற நேரமெல்லாம் நான் என்ன செய்றதோ தெரியல.....!" என்று சொல்லி சலித்து கொண்டவரிடம்,

"ம்ப்ச்! இப்போ எதுக்கு இப்படி புலம்பிட்டு இருக்கீங்க? நந்து இனிமே பண்ணைய பார்த்துக்கப் போறான். நம்ம கவிம்மாவுக்கும் கொஞ்சம் பொறுப்பை குடுத்துடுங்க. இனிமே உங்க மார்னிங் ட்ரிங்க், ப்ரேக் பாஸ்ட் டைம்ல நான் உங்க கூடவே இருக்கேன். நிறைய பேசலாம். அப்பப்போ பூம்பாறைக்கு போயிட்டு வரலாம். நினைச்ச நேரம் சென்னைக்கும், அம்பைக்கும் போயிட்டு வரலாம். அப்பப்போ நதி வீட்டுக்கு  கூட ட்ரிப் அடிக்கலாம். சும்மாவே நேரம் பார்த்து தான் வேலை பார்ப்பீங்க. இனி அதுவும் தேவையில்ல, உங்க பையனும், மருமகளும் பொறுப்பா ஆனந்த ஸாகரத்தை பார்த்துக்குவாங்க. இப்பவாவது முகத்தை தூக்கி வச்சுக்காம இருங்க!" என்று சொன்ன நிர்மலாவிடம் அரைமனதாக "பார்க்கலாம்மா!" என்று சொன்னார் ஜெய் நந்தன். தன் கணவன் அவ்வளவு எளிதில் சமாதானம் ஆகி விட மாட்டார் என்று உணர்ந்து நிர்மலா அதற்கு மேல் அவரை சாவகாசமாக அமர விடாமல் சில சில்லறை வேலைகளை வரிசையாக அவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now