💟 ஜீவாமிர்தம் 64

Начните с самого начала
                                    

"கொஞ்ச நேரம் வாக் பண்ணிட்டு வரலாமாப்பா?" என்று கேட்டான். கீதா அவர்கள் இருவரின் அருகில் கோபத்துடன் வந்து நின்று,

"டேய் நான் உன் அம்மா, உன் ஊமை குசும்பையெல்லாம் என் கிட்ட காட்டாத! அதென்ன என்னை கழட்டி விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் தனியா போய் பேசறது...... கவிம்மா ஜீவாகுட்டி லைஃப்ல எனக்கு அக்கறை இல்லையா..... மரியாதையா இங்கயே எல்லா விஷயத்தையும் சொல்ற!" என்று கேட்க ராகவ் ஒரு பெருமூச்சுடன் கவிப்ரியாவின் தற்போதைய மனநிலையை தன் தாய் தந்தையிடம் உரைத்து விட்டு கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

"கீதுப்பாப்பா உம் பையன் கவிம்மாவை அங்க தள்ளிட்டு போயிட்டா அவனுக்கு துணைக்கு ஒரு ஆள் கிடைச்சிடுச்சு..... அவள பார்க்காம ஜெய் மச்சான், அஜுவால எல்லாம் இருக்க முடியாது. ஸோ அப்பப்போ எல்லாரும் அங்க போயிட்டு வந்துடுவோம். இவனுக்கு தனியா இருந்து வேலை பார்க்குற கஷ்டமும் இருக்காதுன்னு மொத்தமா எல்லாத்தையும் யோசிச்சு இப்படி ஒரு முடிவு எடுத்துட்டான்னு நினைக்கிறேன்!  ஏன்டா இப்படி வில்லத்தனம் பண்ற?" என்று திட்டிய தன் தந்தையை ஒரு பார்வை பார்த்தவன்,

"வில்லத்தனம் பண்றது நானா இல்ல உங்க பொண்ணா மிஸ்டர் பலராம்? அவளா ஆசைப்பட்டு மச்சிய கல்யாணம் பண்ணிக்குவாளாம். அப்புறம் அய்யய்யோ ஜீவா முகத்தை பார்த்தா என் குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுங்குதுன்னு சொல்வாளாம், கல்யாணம் ஆகி ஒரு வாரம் ஆகுறதுக்குள்ள புருஷனுக்கு டாட்டா காட்டிட்டு பொட்டிய தூக்கிட்டு கிளம்பிடுவாளாம். நல்ல வேளை அவ எனக்கு அக்காவா போயிட்டா, தங்கச்சியா மட்டும் பொறந்திருந்தா..... பாகிய மாதிரி நானும் ரெண்டு அறை விட்டுருப்பேன். இப்பவும் சொல்றேன். அவ அழறத பார்த்தா எனக்கு கஷ்டமா இருக்கு. ஆனா எனக்கு துணைக்கு ஆள் வேணும்னு எல்லாம் நான் அவள என் கூட கூட்டிட்டு போகணும்னு நினைக்கல. எல்லாரும் சேர்ந்து பேசி முடிவெடுத்தாலும் சரி, இல்ல நீங்க மட்டும் ஏதாவது முடிவெடுத்தாலும் சரி..... கவிம்மா ஜீவா மச்சி கூட இருக்கற மாதிரி ஏதாவது வழியை பண்ணுங்க. அவள ஹாப்பியா வச்சிருக்கிறத மச்சி பார்த்துப்பாரு. புரிஞ்சதா? ப்ரேக் பாஸ்ட் டைம்ல மீட் பண்ணுவோம். பைமா பைடாட்!" என்று சொல்லி விட்டு வந்த வேலை முடிந்த திருப்தியுடன் கிளம்பி சென்று விட்டான் ராகவ்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Место, где живут истории. Откройте их для себя