💟 ஜீவாமிர்தம் 62

Start from the beginning
                                    

"ஏன்டா தப்பு பண்றேன்னு சொல்றதோட நிறுத்திட்ட..... நான் ஜீவாவ யூஸ் பண்ணிக்குறேன்னு சொல்ல வேண்டியது தானே..... என்னோட எல்லா ஃபீலையும் உங்கிட்ட சொல்ல முடியாது தம்பி. இதுக்கு மேல நான் ஜீவாட்ட பேசிக்குறேன். நாளைக்கு பங்ஷன் முடிஞ்சதுக்கப்புறம் அவனே என்னை அப்பா அம்மா கூட அனுப்பி வைப்பான் பாரு!" என்று சொன்ன தன் அக்காவை கேவலமாக முறைத்த ராகவ்,

"மறுபடியும் மச்சிய எல்லாரும் தப்பா நினைக்குற ஒரு சிச்சுவேஷனை க்ரியேட் பண்ண போற...... இந்த தப்புக்கு உன் மனசுல ஒரு குற்ற உணர்ச்சி வருமே? அதென்ன செய்ய போற கவிப்ரியா?" என்று கேட்டான் ராகவ்.

கவிப்ரியா தன் தம்பியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்து கொண்டு அமர்ந்திருந்த போது அவளது அறைக் கதவு தட்டப்பட்டது.

"இந்த நேரத்துல யாரா இருக்கும்டா.... கதவைத் திறந்து விடேன்!" என்று ராகவிடம் சொல்லிய கவிப்ரியாவை ஒரு வெற்றுப் பார்வை பார்த்து விட்டு சென்று கதவை திறந்து விட்டான் ராகவ்.

"ஓய் என்ன ரெண்டு பேரும் கதவை பூட்டிகிட்டு சீரியஸா.....? டேய் மண்டைவீங்கி நாளைக்கு உங்க அக்காவை இங்க விட்டுட்டு போகப்போறோமேன்னு உனக்கு கவலையா இருக்கா.... எனக்கும் ஷைலு, இனியாவை பிரியப் போறோமேன்னு நினைச்சு வருத்தமா தான்டா இருக்கு....!" என்று சொன்ன ஜீவானந்தனை பார்த்து, "ஐ'ம் ஸாரி மச்சி, உள்ள போய் உங்க பொண்டாட்டி கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க. நான் கிளம்புறேன். பை!" என்று சொல்லி விட்டு வெளியே சென்றான் ராகவ்.

"ஏய் மூக்கி பையன் எதுக்கு நம்ம கிட்ட ஸாரி கேட்டு போறான்..... நம்மள தொந்தரவு பண்ணிட்டோம்னு நினைச்சு ஸாரி சொல்லிட்டு போகுதா பயபுள்ள..... நாளைக்கு ராத்திரியெல்லாம் இந்த மாதிரி யாரையும் உள்ள விட்டு தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க கூடாது. புரியுதா..... நீ இன்னிக்கு பாடுன பாட்டு ரொம்ப ரொம்ப நல்லாயிருந்தது. ஏன்டீ திடீர்னு அழுத..... எனக்கு உன் கண்ணுல கண்ணீரை பார்த்தவுடனே கஷ்டமாகிடுச்சு. இனிமே எதுக்கும் அழாத. சரியா? இப்போ எதாவது குறையிருந்தா சொல்லு. உன் கண்ணன் கேக்குற மூடுல இருக்காரு!" என்று சொல்லி விட்டு அவளருகில் வந்து அமர்ந்தவனிடம் இருந்து ஒரு சிறு இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டாள் கவிப்ரியா.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now