💟 ஜீவாமிர்தம் 48

Start from the beginning
                                    

"ஆ........ அம்மா, வாணி, ராகவ்..... இந்த லூசுப்பய கிட்ட இருந்து என்னைய யாராவது காப்பாத்துங்களேன்!" என்று பார்கவ் வலியில் கத்திக் கொண்டிருக்க அர்ஜுன் அவர்கள் இருவரின் அருகில் சென்று அவர்கள் சண்டையை முடித்து பார்கவை மீட்டார்.

"காட் தேங்க்ஸ் பெரியப்பா..... என்னைய காப்பாத்த நல்ல நேரத்துல வந்த; இந்த பையனுக்கு நிறைய லெக்சர் எடு, சொன்ன பேச்சை கேக்கவே மாட்டேங்குறான், பேட் பாய்!" என்று சொல்லியவாறு தன் கைகளை மடக்கி நீட்டிக் கொண்டு இருந்தவனிடம்,

"அபி அப்போலேர்ந்து உன்னை தேடிட்டு இருக்கா பாரு; இனியாவையும் மாப்பிள்ளையையும் கூட்டிட்டு போய் சாப்பிட வைங்க, சரஸ் கூட உட்கார்ந்து லன்ச் சாப்பிட சொல்லி கவிட்ட சொல்லிட்டு போ. அவ கூட இருந்தா கரெக்டா சாப்பிட்டு முடிச்சுடுவாங்க. ஜீவா நீ என் கூட வா, உன் கிட்ட பேசணும்!" என்று சொல்லி விட்டு சென்றார் அர்ஜுன். பார்கவ் அவரிடம் தலையாட்டி விட்டு மணமேடையில் பரிசுப் பொருட்கள் நாலைந்தை மொத்தமாக தூக்கிக் கொண்டு இருந்த அவன் மனைவியின் அருகில் ஓடி வந்தான். "வாணிம்மா கைய இவ்வளவு ஸ்ட்ரெயின் பண்ணி கிப்ட்ஸை தூக்காத; கை வலிக்கலையா......?" என்று அபியிடம் கேட்டான். "ஒரு கிப்ட்ட தூக்குறதுல கை வலிச்சுட போகுதா... வலி தான் சரியாகிடுச்சே! டென்ஷன் ஆகாதீங்க ஆடிட்டர் ஸார்!" என்று சொல்லி அபிநயா தன் கணவனை சமாதானம் செய்து கொண்டிருக்க  அவர்களது அந்நோன்யத்தை ரசித்தவாறு மேடையின் அருகில் சென்றான் ஜீவானந்தன்.

தன் தங்கை மற்றும் மாப்பிள்ளையிடம் கைகுலுக்கி திருமண வாழ்த்து தெரிவித்து விட்டு அவனது கார் சாவியை ராசுவிடம் பரிசாக கொடுத்தவனிடம் ராசு, "எலேய் என்னவே பண்ற..... காரெல்லாமா கல்யாணத்துக்கு கிப்ட் குடுப்பாங்க, உந்தங்கச்சி காருல போகமுண்ணு ஆசைப்பட்டான்னா அப்போ காரு வாங்கிக்கிடுறேன்டா ஜீவா!" என்று சொல்லிய ராசுவைப் பார்த்து சிரித்த ஜீவா,

"எங்கப்பா, சித்தப்பா, மாமா, தாத்தா எல்லாம் உங்க கல்யாணத்துக்கு சீர் தந்தாங்கல்ல, அப்போ அண்ணனா இனியாவுக்கு நான் ஏதாவது தரணும்ல்ல, அதுனால தான் கார் தர்றேன், அன்னிக்கு நீ நம்ம கார்ல ட்ராவல் பண்றப்ப பிடிச்சிருக்குன்னு சொன்னியேடா, என்ன தான் உன் புல்லட் ஸ்டைல் ஐகானா இருந்தாலும், டூ வீலர் ட்ரைவ், அதுவும் லாங் ட்ராவல் எல்லாம் ஸேப் இல்லடா, ஸோ வாங்குன மூணுல இனியா, ரூபிக்கு, அப்புறம் கவிக்குன்னு காரை தந்துடலாம்ன்னு டிஸைட் பண்ணிட்டேன், பண்ணைல, எஸ்ஜேஎன்ல வேலை பார்க்குறவங்க எல்லாம் பஸ்ல இருந்து ட்ராவல் பண்ணி வர்றப்ப இந்த மாதிரி லக்சூரியஸ் கார் எல்லாம் எனக்கு தேவையில்ல, சென்னைக்குப் போகணும்னா அப்பா வண்டியை யூஸ் பண்ணிக்குவேன். அடுத்து காருக்கு எல்லாம் பட்ஜெட் கிடையாது, நம்ம அண்ணாங்களுக்கு வேன் பஸ் தான்......!" என்று சொல்லி புன்னகைத்தவனிடம் இனியா,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now