💟 ஜீவாமிர்தம் 41

Start from the beginning
                                    

சிறிது நேரத்தில் பாலன்ஸ் செய்து இருவரும் நின்று விட அபிநயா பலுனை உடைத்து பேகை பற்றிக் கொண்டதும் பல வண்ணப்பொடிகள் அவர்களின் மேல் கொட்டியது.

"ச்சை இது வேறயா.....கலர் பொடியில குளிக்க வச்சுட்டாளுக பாரு.....என் காஸ்ட்லி வெட்டிங் சூட் பாழாகிடுச்சு!" என்று தன் தலையில் விழுந்த பொடிகளை தலையை ஆட்டி உதறியவன் தன் தோளில் நின்று கொண்டு இருந்த மனைவியை தன் அசைவு பாதிக்கும் என்று மறந்து விட்டான்.

"கவி பயமாயிருக்கு எதை ஹோல்ட் பண்ண.....ஆ ஆ நான் விழப்போறேன் கவி!" என்று பதறிய அபிநயா அவன் "வாணிம்மா கேர்புல்!" என்று சொல்வதற்குள் கால்களை மடக்கியிருந்தாள். புடவையோடு விழுந்து வைத்தால் தன் மனைவி அனைவர் முன்பும் மனம் குன்றி விடுவாள் என்று நினைத்து பார்கவ் அவளை இடப்புறம் தாவி அணைத்துக் கொண்டு தான் உருண்டான். தன்னை இறுகப் பிடித்துக் கொண்டவன் மார்பில் விழுந்து கிடந்தாள் அபிநயா.

"சூப்பர் திஸ் இஸ் வாட் வி எக்ஸ்பெக்ட், மிஸஸ் அண்ட் மிஸ்டர் பார்கவ்!" என்று கை தட்டிய கவிப்ரியா, ஷைலஜாவிடம் ராகவ், "ஏய் என்ன இந்த மாதிரி விளையாட்டு எல்லாம் ..... ரெண்டு பேருக்கும் ஏதாவது அடிபட்டுருந்தா என்ன பண்றது?" என்று கவியையும், ஷைலுவையும் திட்டிக் கொண்டு இருந்தவனிடம்,

"கொஞ்சம் அங்க பாரு தம்பி!" என்று சொல்லி அவன் முகவாயில் கை வைத்து திருப்பினாள் கவிப்ரியா. பார்கவும் அபிநயாவும் ஒருவரில் ஒருவர் மூழ்கி உலகை மறந்திருந்தனர்.

"பெல் அடிச்சா உள்ள வரணும்னு சொல்லி கஷ்டப்பட்டு பெல் எடுத்துட்டு அத கையில வச்சுட்டு ரெண்டும் நம்மள மறந்தே போயிருச்சுங்க போல.....வாங்க நம்ம உள்ள போகலாம்!" என்று சிரித்தவளிடம் ஷைலஜா "கவி அக்கா உன் ப்ளான் சூப்பர்!" என்று அவளை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

ஒத்தையில போகும்
ஒத்தையடி பாதை
உச்சந்தல வகிடாச்சே!
உச்சி மல ஏறும் வண்டித்தடம்
போல ரெட்ட ஜட விழுதாச்சே!
தண்ணீர் ஆடும் கரகாட்டம்
இவ நெஞ்சு மேல மழை மூட்டம்
கட்டிப் போட்ட புயலாட்டம்
இவ கிட்ட போனா பயங்காட்டும்
தந்தனானா தந்தனானா தந்தனானா
தந்தனானா தானேனான தந்தனானா
என்று பாட்டு பாடிய படி நள்ளிரவு பதினொன்றரை மணியளவில் உப்புமாவை கிளறிக் கொண்டு இருந்தான் இசக்கி ராசு.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now