💟 ஜீவாமிர்தம் 37

Start from the beginning
                                    

"ஏன்டா சின்னவனே அண்ணிக்கு அடிபட்டுடுச்சுன்னு நியாயமா பாகி தான் டென்ஷன் ஆகணும், ஆனா நீ எதுக்குடா ஒரங்குட்டான் மாதிரி முகத்தை வச்சுட்டு உட்கார்ந்து இருக்க? நிறைய சாப்பிட்டதுல வயிறு எதுவும் வலிக்குதா?" என்று கேட்ட தன் அக்காவிடம்,

"நீ வாய்க்கு ரெஸ்ட் குடுக்காம யூஸ் பண்ணி அந்த விஷயம்லாம் என் காதுக்குள்ள போய் காது வலிக்குது; கொஞ்ச நேரம் உன் வாய்க்கும், என் காதுக்கும் ரெஸ்ட் கிடைக்கட்டும், நல்லாயிருப்ப கிளம்பும்மா!" என்று சொல்லி பெரிய ஒரு கும்பிடு போட்டு தன் அக்கா மற்றும் அண்ணியை மேலே அறைக்கு அனுப்பி வைத்தான் ராகவ்.

"அப்பா, பெரியப்பா வாணி பாவம் நான் இல்லாம கஷ்டப்பட்டுட்டா; அவளுக்கு ஒரு லவ்வரா நான் குடுக்க வேண்டியது வாழ்க்கை பூரா அவ கூட வருவேன்னு ஹோப்பும், இவன் கூட இருந்தா பெட்டரா இருக்கும்ன்னு ஒரு செக்யூர்டு ஃபீலும் தான்! அதை எங்க மேரேஜ் மூலமா அவளுக்கு சீக்கிரம் குடுக்கணும்னு நினைக்கிறேன்! மாமா, தாத்தாட்ட பேசிட்டு சொல்லுங்கப்பா!" என்று சொல்லி விட்டு அவன் அறைக்கு செல்ல ராகவ் மீரா, அர்ஜுன், மற்றும் பலராம், கீதாவுடன் தனியாக ஒரு கூட்டம் போட்டு அபிநயாவின் குடும்ப நிலையை தனக்கு தெரிந்த வரையில் எடுத்து சொல்லி இப்போது உடனடியாக பார்கவ் அபிநயாவின் திருமணத்தை நடத்தி விடலாம் என்று ஜெயந்தனிடம், ஜெய்யிடம் பரிந்துரை செய்ய சொன்னான்.

"சரஸ் பாகி அபி கல்யாணத்தை சீக்கிரம் வச்சுடலாமா? நீ என்ன நினைக்கிற?" என்று தன் தாயிடம் கேட்டார் பலராம்.

சரஸ்வதி சற்று நேரம் யோசித்து விட்டு, "கல்யாணமா..... யாருக்கு? யாருக்கா இருந்தாலும் செஞ்சு வச்சுடு அஜு, நல்ல விஷயம் தானே!" என்று பலராமின் தோளை தடவிக் குடுத்து சொன்னதும் சகோதரர்களும், சகோதரிகளும் மகிழ்ந்து ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர்.

"எல்லாம் சரி தான்; இப்போ பூனைக்கு யாரு மணி கட்டுறது? உன் மருமகனுக்கு கல்யாணம்ன்னு அவன்ட்ட சொன்னோம்..... பத்து பக்கத்துக்கு வில்லுப்பாட்டு பாடி நம்மள கொலையா கொன்னுடுவான், இப்போ என்ன பண்றது?" என்று கேட்ட அர்ஜுனிடம் பலராம்,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now