💟 ஜீவாமிர்தம் 34

Comenzar desde el principio
                                    

"ஏன்டா டீ வேணும்னா தனியா குடிக்க வேண்டியது தானே..... என் கப்பை எதுக்கு வாங்கிக்குற? எதுக்கு இப்படி சின்ன பையன் மாதிரி உட்கார பெர்மிஷன்லாம் கேட்டுட்டு இருக்க?" என்று கேட்ட தன் தந்தையிடம்,

"உங்களோட டீ தான் நல்லா இருக்கும்ப்பா, ரெண்டு பேரும் ஏதோ முக்கியமா பேசிட்டு இருந்தீங்க....அதான் பெர்மிஷன் கேட்டேன். என்னம்மா அப்பா ஏதாவது திட்டீட்டாங்களா?
டல்லா இருக்குற மாதிரி தெரியுறீங்களே?" என்று கேட்டவனிடம்

"நீ, உங்க அப்பா, சித்தப்பான்னு மூணு பேரும் இந்த வீட்ல எதுக்கு இருக்கீங்கன்னு யோசிச்சுட்டு இருக்கேன் நந்து. அன்னிக்கு ஒருத்தர் வந்து இனியாவை தூக்கிட்டு போனாரு, அப்பவும் பின்னாலயே போய் சமாதானம் பேசினோம். இன்னிக்கும் ஒருத்தர் ஷைலுவை அடிச்சுட்டு போறாரு, அவருக்கும் பல்லைக் காட்டிட்டு டாட்டா சொல்லி வழியனுப்புறீங்க..... உங்க அப்பாவுக்கு கொஞ்சம் கூட சுரணையே இல்லையா? கோபம் வரலயான்னு கேட்டு சொல்லு!" என்று சொன்ன நிர்மலாவை,

"ஆனந்த் உங்கம்மா ரொம்ப ஓவரா போறா. இப்படி பேசறது எனக்கு பிடிக்கலடா, அவ கிட்ட சொல்லி வை!" என்றார் ஜெய் நந்தன்.

"அப்பா கூல் டவுன், ரிலாக்ஸ்டா இருங்க, அம்மாட்ட நான் பேசிக்கறேன்!" என்று சொன்னவன்,

"அம்மா, ராசு இனியாவை கடத்திட்டு போனதுக்கும், பவின் ஷைலுவை அடிச்சதுக்கும் பேஸிக் ரீசன் ஒண்ணு தான், அவங்க ரெண்டு பேரும் அவங்கங்க பெட்டர் ஹாப் அ லவ் பண்றாங்க. இவ்வளவு
பேசுறீங்களே, உங்க பொண்ணு மட்டும் என்ன ரொம்ப சாந்தசொரூபியாவா நின்னுட்டு இருந்தா? அவளும் தானே அவரை பந்தால அடிச்சா......அவரை திட்ட வேற செஞ்சுருக்கா! மனசுக்கு பிடிச்ச பொண்ணு அடிச்சாலும் கடிச்சாலும் சத்தமே காட்டாம வாங்கிக்குறதுக்கு அவரென்ன ஜீவானந்தனா?" என்று கேட்டவன் தலையில் பின்புறம் இருந்து ஒரு குட்டு விழுந்தது. திரும்பி பார்த்தவனை இடுப்பில் கை வைத்து முறைத்தவாறு நின்று கொண்டு இருந்தாள் ஷைலஜா. 

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Donde viven las historias. Descúbrelo ahora