💟 ஜீவாமிர்தம் 25

Beginne am Anfang
                                    

"வாங்க ஸார்! உள்ள போகலாம்! கவி மேடம் உங்களை தெரியும்னு சொல்லிட்டாங்கன்னா நான் வீட்டுக்கு கிளம்பறேன்! அவங்க தூங்கிட்டு இருக்காங்க. எப்படி தனியா விட்டுட்டு போறதுன்னு யோசிச்சுட்டு தான் இவ்வளவு நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நானும் வீட்ல போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவ்னிங் வரணும்!" என்று சொல்லிக் கொண்டு அவளுக்குள் அவனை அழைத்து சென்றாள்.

அவள் ஒரு மூன்று நட்சத்திர விடுதி போல் அனைத்து வசதிகளுடன், ஒரு தனித்தன்மையுடன் அவனது அவள் போலவே ஒரு அழகுடன் மிளிர்ந்தது.

அவள் ஒரு மூன்று நட்சத்திர விடுதி போல் அனைத்து வசதிகளுடன், ஒரு தனித்தன்மையுடன் அவனது அவள் போலவே ஒரு அழகுடன் மிளிர்ந்தது

Hoppla! Dieses Bild entspricht nicht unseren inhaltlichen Richtlinien. Um mit dem Veröffentlichen fortfahren zu können, entferne es bitte oder lade ein anderes Bild hoch.

"இன்ட்டீரியர்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு சிஸ்டர். எங்க மாமன் காசை எப்படி எல்லாம் பாழாக்கியிருக்கா மூக்கி!....... வாவ்; ஃபைபர் க்ளாஸ்ல பிஷ் டாங்க் ஆ; இது கண்டிப்பா எங்க அம்மா ஐடியாவா தான் இருக்கும். உள்ள கூட போக முடியும் போலிருக்கே சிஸ்டர்....." என்று ஆச்சரியத்துடன் கேட்டவனிடம்,

"ஷாப்புக்கு வர்ற கிட்ஸை அட்ராக்ட் பண்றதுக்காக வச்சிருக்கோம் ஸார்! இந்த பிஷ் டாங்க் நடுவில ஒரு குட்டி சேர் இருக்கு. குழந்தைகளை அங்க ஹோல்ட் பண்ணிட்டோம்னா அவங்க அம்மா ஃப்ரீயா ஷாப் பண்ணலாம். இன்னும் ரெண்டு செட் கூட பர்சேஸ் பண்ணலாம்ல.....!" என்று அவள் சொன்னதும் ஜீவா ஒரு மார்க்கமாக தலையாட்டி விட்டு கவிப்ரியாவின் அருகே சென்றான்.

இரவு முழுவதும் அவள் சிரமப்பட்டு வடிவமைத்த உடைகள் மேனிகுயின்களிடத்தில் அழகுற மாட்டி விடப்பட்டிருந்தது. துணிகள், குப்பைகள் என்று எதுவும் தேங்கி இருக்காமல் அவை அவை அதனதன் இடத்தில் இருந்தது. ராஜகுமாரி இரு ஸோஃபாக்களை எதிர் எதிராக இணைத்து தலைக்கு, கால்களுக்கு இரு தலையணைகளை வைத்துக் கொண்டு சுகமான துயிலில் ஆழ்ந்திருந்தாள்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Wo Geschichten leben. Entdecke jetzt