💟 ஜீவாமிர்தம் 20

Start from the beginning
                                    

தன் அண்ணன் மகன் மகிழ்ச்சியில் தானும் மகிழ்ச்சி அடைந்து அர்ஜுனை அழைப்பதற்காக போனை எடுத்தார் மீரா.

"உள்ள வாங்க மிஸ்டர் ஜீவானந்தன்!" என்று அவள் அறைக்குள் நின்று கொண்டு கூப்பிட்டவளை பார்த்து புன்னகைத்தவன்,

"என்ன மேடம் மரியாதை எல்லாம் ஹை லெவலுக்கு எகிறுது..... என்ன விசேஷம்?" என்று கேட்ட படி கட்டிலில் அமர்ந்து கொண்டான் ஜீவானந்தன்.

"சும்மா...... அப்பப்போ ஏதாவது வெரைட்டி வேணும்ல..... இந்த மாசம் வெயிட் கூடி இருக்கியா? குறைஞ்சு இருக்கியாடா..... ஒழுங்கா ஒரு கெட்டப்ல இல்லாம ஏன்டா திடீர்னு தாடி வைக்கிற, அப்புறம் க்ளீன் ஷேவ் பண்ற, இல்லன்னா ப்ரெஞ்ச் பியர்டுல இருக்க. இப்போ பார்த்தா நாலு நாள் தாடில இருக்க! மனுஷிக்கு இம்சையா இருக்கு!" என்று சலித்துக் கொண்டவளை அருகில் அமர்த்தியவன்,

"ம்ம்ம்.....இந்த மன்த் இன்னும் வெயிட் செக் பண்ணலையேடா அம்முலு..... கண்டிப்பா கூடி தான் இருக்கும்னு நினைக்கிறேன்! ஆனா நான் ஹேண்ட்ஸமா இருக்கேன்னு உனக்கு பொறாமைடீ கேப்ஸி! பண்ணையார் சக்தி, முத்துவை ரூமுக்குள்ளயே வச்சுட்டு கவனிச்சுக்குறாரு தெரியுமா..... ரொம்ப பேபீஸா இருக்காங்களாம். ஸோ வெளிய டாக் ஷெல்டர்ல இப்போதைக்கு விட முடியாதாம். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் அவங்க வந்ததுக்கப்புறம்
ஒரே சண்டை, எப்படியோ கஷ்டப்பட்டு ரெண்டு பேரும் காம்ப்ரமைஸ் ஆகிட்டாங்க. உனக்கு எப்படிடீ இப்படி ஒரு கிப்ட் வாங்கணும்னும், அதை என்னோட கிப்ட்னு சொல்லணும்னும் தோணுச்சு?" என்று கேட்டவனை உற்று நோக்கியவள்,

"சத்தியமா சொல்லு. உனக்கு உங்கப்பாவை பார்க்க போகும் போது கிப்ட் எதுவும் வாங்கலன்னு கொஞ்சம் கூட யோசனை வரலையா..... எல்லாருக்கும் பார்த்து பார்த்து செய்றவன்; ஆனா அவருக்கு எதுக்கு நான் எதுவும் வாங்கணும்ங்கிற வீம்புல தானே ஒண்ணும் வாங்கல...... பட் என்னால டார்லிங்க அப்படி ஃபீல் பண்ண விட முடியுமா? அது தான் உன் சார்பா சக்தி, முத்துவை குடுத்துட்டேன். சரி சொல்லு எப்படி இருக்கு உன் ஆனந்த ஸாகரம் லைஃப்?" என்று கேட்டவளிடம் வருத்தத்துடன்,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now