💟 ஜீவாமிர்தம் 18

Start from the beginning
                                    

"யோவ் கண்ட்ரி மேன்.....டோண்ட் யூ ஹாவ் எனி மேனர்ஸ்....உன் ஸ்லாங்கும், நீயும்; ரெண்டு பேர் பேசிட்டு இருக்கும் போது இப்படி தான் மொபைலை வாங்குக்குவியா? போனை லட்டு கிட்ட குடுடா!" என்று எரிச்சலுடன் கத்தியவளிடத்தில் புன்னகையுடன்,

"எம்பொண்டாட்டி போனை நான் வச்சுட்டு இருக்கன்; இதுல என்னலே நீ கேட்ட மேனர்ஸ் குறைஞ்சு போச்சு.....
போனு முதல்ல இருந்தே என் கையில தாமுலே ஸ்பீக்கர்ல கிடக்கு. உங்களுக்கு மூத்தவகள மரியாதை இல்லாம பேசக் கூடாது! உங்கண்ணனுக்கு நா மச்சான் முறை வேணும்! அப்போ உங்களுக்கும் அப்படித்தேன்..... மச்சான்னு  இல்ல அத்தான்னு கூப்புடுக. வாடா, போடான்னு உங்களுக்கு வரப்போற வூட்டுக்காரனை கூப்புடுக! இன்னும் மூணு மாசத்துல எனக்கும் நர்ஸம்மாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு எல்லாரும் பேசிகிட்டு இருக்காவ; அதுவரைக்கும் உங்க ஸ்நேகிதி உங்க வீட்ல தாமுலே இருப்பாக! ஆனாக்க அப்பப்போ நான் உங்களுக்கு நடுவால வருவேன். இப்போ உங்க ஸ்நேகிதி கிட்ட பேசுறீகளா?" என்று கேட்டவன் இனியாவின் அருகில் வந்து,

"ஏட்டி அழகி, மாமனுக்கு ஒரு முத்தம் குடு. அப்பத்தேன் உன் போன உங்கையில தருவேன்!" என்றான் கண்சிமிட்டி.

"என் கிட்ட ஒரு அறை வாங்கினதுக்குப்புறம் கூட உங்களுக்கு சூடு சுரணையே இல்லையா? நான் ரூபிட்ட பேசணும். எனக்கு கொஞ்சம் ப்ரைவஸி வேணும். இங்கிருந்து கிளம்புங்க!" என்று சொன்ன மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினான் இசக்கிராசு.

மாடியை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே கீழே இறங்கி வந்தவனை வழிமறித்த ஜீவானந்தன், "உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் மாப்பிள்ளை; வர்றீங்களா?" என்றான்.

"வாலே மச்சான், ஆசையா கூப்பிடுதீக, என்னதேன் சொல்றீகன்னு கேப்பம்!" என்று ஜீவாவின் தோளைப் பற்றிக் கொண்டு வீட்டின் திண்ணையில் உள்ள சேரில் அமர்ந்து கொண்டான் ராசு. அவனருகில் அமர்ந்து கொண்ட ஜீவானந்தன் தன் தந்தையின் மேல் ஒரு கண்ணை வைத்தவாறு,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now