💟 ஜீவாமிர்தம் 11

Start from the beginning
                                    

"உனக்கு என்னடா ஆச்சு? ஒரு மாதிரி முகமெல்லாம் டென்ஷனா இருக்கு? தைரியமா சொல்லு. என்ன ப்ராப்ளம்ன்னாலும் சரி பண்ணிக்கலாம்!" என்று சொன்னவனிடம் தயக்கத்துடன்,

"எக்ஸாம் முடிஞ்சதும் க....கல்யாணம் பண்ணிக்குறியா அத்தான்?" என்று திணறியவளை ஓர் ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு,

"யாரு யாரை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு கேக்குற ஷைலஜா?" என்றான். அவன் குரலில் இருந்த அழுத்தம் ஷைலஜாவின் உடலில் நடுக்கத்தை வரவழைத்தது.

"என்னை தான் அத்தான்........! வந்து......!" என்று இழுத்தவளை

"போதும் நிறுத்து!" என்றான் பார்கவ் கையை உயர்த்தி.

பக்கவாட்டு சுவரில் கைகளை ஊன்றி தலையை கைகளில் தாங்கி நின்றான். ஐந்து  நிமிடங்களில் நெற்றியில் வியர்வை அரும்பியது. புருவ இடைவெளி விண்விண்ணென்று தெறிக்க ஆரம்பித்து இருந்தது. மூன்று பேரையும் ஒரே மாதிரி தானே நடத்தினோம்.....? தன் மேல் எந்த இடத்தில் தவறு நேர்ந்தது என்று யோசித்து கொண்டிருந்தவனிடம்,

"எனக்கு பைனல் இயர் முடிஞ்சதும் கல்யாணம் செஞ்சு வச்சுடுவாங்க. கவிம்மா அங்கே வந்து இருக்க போற மாதிரி எனக்கும் இங்க வர்றதா இருந்தா கம்பர்டபிளா இருக்கும். நீயும் என்னை நல்லா பார்த்துப்ப; ஆனா உனக்கு ஓகேவா அத்தான்?" என்று கேட்ட ஷைலஜாவிடம்

"உன்னை நல்லா பாத்துக்கணும்னா அதை எந்நேரமும் நான் செய்வேன் ஷைலு, ஆனா கல்யாணம்..... கவி அங்க போற மாதிரி நான் இங்கன்னு உளறுற பாரு! இதெல்லாம் தயவுசெய்து நிறுத்திக்க. அப்படி எல்லாம் யோசிக்கவே எனக்கு..... ப்ளீஸ்! வேண்டாம் விட்டுடு; எனக்கு கவிம்மா மாதிரி தான் நீயும், இனியாவும்; நான் எந்த இடத்தில உன்னை கல்யாணம் வரைக்கும் யோசிக்க வைச்சு தப்பு பண்ணிட்டேன்னு எனக்கு தெரியல. என்னையறியாம வார்த்தைகள்லயோ, என் செயல்களயோ உனக்கு அப்படி ஒரு எண்ணத்தை நான் குடுத்திருந்தா என்னை மன்னிச்சுடு ஷைலு; பட் இனிமே இப்படி என்னை எம்பாரெஸ் பண்ணாதடா!" என்று சொன்ன படி தலைகவிழ்ந்து  நின்றிருந்தவனிடம்,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now