💟 ஜீவாமிர்தம் 10

Start from the beginning
                                    

"21 வயசு முடிஞ்சதுனா சின்னப் புள்ளையா டீப்? சொல்லவேயில்லையே..... அப்போ நீங்க கூட ஒரு சின்னப் புள்ளைய தான் கல்யாணம் பண்ணி இருக்கீங்க..... இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!" என்று சொல்லி சிரித்த மனைவியை பின் புறமிருந்து அர்ஜீன் இழுக்கவும் அவர் பின்னால் இருந்த அர்ஜுனின் மேல் சாய்ந்து பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.

"அது..... உன்னை எல்லாம் சின்னப்பொண்ணுன்னு நினைச்சுட்டு என்னால பொறுமையா இருக்க முடியல...... சரி, இவ்வளவு வாய் பேசுறியே;
உனக்கு என்ன தான்டீ தெரியும்? 46 வயசாகிடுச்சு.... இன்னும் ஒழுங்கா லவ் மேக்கிங் பண்ண தெரியல. ஒத்தப் பொண்ணை பெத்துட்டு போதும்னு சொல்லி  நிறுத்திக்கிட்டோமே..... இப்ப அவ கல்யாணம் பண்ணி போய்ட்டான்னா புருஷங்காரன் ஒரு புள்ளை இல்லன்னு ஃபீல் பண்ணுவானேன்னு யோசிக்க தெரியல. எத்தனை தடவை பையன் வேணும்னு கேட்டேன். கன்சிடர் பண்ணியா? இப்போ பாரு. கவிம்மா போனவுடனே ஒரு வேக்யூம் ஸ்பேஸ் வந்துடும். அதை நீ எப்படி ஃபேஸ் பண்றன்னு நானும் பார்க்குறேன்! ரமி இப்ப கொஞ்சம் பைங்கனி இதழில் பழரசம்....." என்று இழுத்த தன் கணவனின் முதுகில் ஒரு அடி வைத்து,

"அடச்சீ....என்ன டீப் நீங்க? பழரசம்; பழைய ரசம்ன்னுட்டு.... சும்மா இருங்க!" என்று அடக்கியவர்,

"ஒரு நாளைக்கு ரெண்டு தடவ பெரியம்மா, பெரியம்மான்னு நம்ம பாகி தேடி வந்துடுறான். பத்து நாளைக்கு ஒரு தடவை பகல்ல வேலையை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு என் கிட்ட லைவ் சாட்டிங்க்கு வர்றீங்களா பெரியம்மான்னு ராகவ் வந்துடுறான். இது போதாதுன்னு ஜீவாக்குட்டி வேற..... அவனுக்கு எத்தன வயசாகிடுச்சுன்னு கூட மறந்து போய் பப்பு பூவா ஊட்டி விடு மீராத்தைன்னு கன்னுக்குட்டி மாதிரி உரசிட்டு வந்து நிக்கிறான். இந்த பசங்களை, உங்களை எல்லாம் கவனிச்சுக்கறது போகவா என் லைஃப்ல வேக்யூம் ஸ்பேஸ் வரப் போகுது? ம்ஹூம்! வாய்ப்பே இல்ல. அப்படியே இருந்தாலும் சரி, இன்னும் ஒரு வருஷம்.... மிஞ்சி போனா ஒன்றரை வருஷத்துல ஒரு குட்டிப் பாப்பாவோ, பையனோ நம்ம வீட்டுக்கு வந்துடுவாங்க......!" என்று சிரிப்புடன் சொன்னவளிடம் கன்னத்தில் முத்த மழை பொழிந்து,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now