💟 ஜீவாமிர்தம் 8

Start from the beginning
                                    

"அடிப் போடீ இவளே..... அதெல்லாம் அறியாத வயசு, இப்போ எல்லாம் உங்கண்ணி ரொம்ப போல்டாகிட்டா.  நோ பேச்சுவார்த்தை, நோ சமாதான உடன்படிக்கை, ஒன்லி ஸ்ட்ரைட் டீலிங் தான்! எனக்காச்சு, அந்த மலைமாடுக்காச்சு; மூச்சு விட முடியாம உங்கண்ணன் என் கிட்ட மாட்டிக்கிட்டு என்னை விட்டுடு அம்முலு, நான் பாவம்டான்னு கெஞ்சணும். போனா போகுது பொழைச்சு போறான் பையன்னு நம்மளும் விட்டுடணும்! சும்மா வார்த்தைக்கு வார்த்தை வாயாடிட்டு இருந்தா அவன் வாயை என் வாயால தான் மூடி வைக்கணும். அப்போ தான் அடங்குவான்!" என்று கவிப்ரியா கெத்துடன் சிரிக்க ஷைலஜா கையை உதறிக் கொண்டு,

"ஐயோ அம்மா, அத்தை இங்க வாங்க! இந்த கவிப்ரியா தப்பு தப்பா பேசுறா! வாயில சூடு போடுங்க!" என்று கத்திக் கொண்டு வீட்டிற்குள் ஓடிக் கொண்டிருக்க அவள் பின்னாலேயே ஓடி வந்து அவளை தடுத்து நிறுத்தி,

"அடியேய் குட்ட கொக்கு.... நான் உன்னை விட ரெண்டு வயசு மூத்தவடீ! உன் ஜீவா அண்ணன் இதெல்லாம் எங்கிட்ட எக்ஸ்ப்ரிமெண்டே பண்ணிட்டு இருக்கான். நான் சும்மா பேசினா தப்பாடீ? ஒழுங்கா சின்ன புள்ளையா அங்கிட்டும், இங்கிட்டும் ஓடாம, எதையும் போட்டு குடுக்காம அடக்க ஒடுக்கமா இரு!" என்று சொல்லி ஷைலுவின் தலையில் குட்டி விட்டு சென்றாள் கவிப்ரியா.

இரவில் ஜெய் நந்தன் மலைக்கு கிளம்பவதென்று முடிவு செய்து அனைவரிடமும் சொல்லி இருந்தார். காலை உணவு நேரம் முடிந்ததும் அனைவரும் ஹாலில் அமர்ந்து இருந்த போது கவிப்ரியா அவரிடம்,

"டார்லிங்....என்ன வந்து ரெண்டு நாள் தான் ஆச்சு, அதுக்குள்ள கிளம்பறேன்னு
சொல்லுற?" என்று கேட்டு விட்டு அவர் மடியில் அமர்ந்து கழுத்தை கட்டிக் கொண்டாள்.

"எனக்கு கிளம்ப மூடே இல்லடா ஏஞ்சல்! ஆனா அங்க ஒரு ரோபோ உட்கார்ந்து இருக்கான் பாரு! அவன் தான் எப்போ வருவ; எப்போ வருவன்னு என் உயிரை எடுக்கிறான்! இன்னும் 4 நாள் தானே? அதுக்கு பிறகு எல்லாரும் மலைக்கு தானே வரப் போறீங்க ன்னு தான் அவன் கிட்ட வந்துடுறதா ஒத்துக்கிட்டேன். சீக்கிரம் வந்துடணும்டா ஏஞ்சல்! எல்லாரையும் நீ தான் கூட்டிட்டு வரணும், இந்த வருஷம் பங்ஷனுக்காக நான் ரொம்ப எக்ஸைட்டடா காத்துக்கிட்டு இருக்கேன்!" என்றவரிடம்,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now