🌻 அழகி 94

593 16 9
                                    

ஜெயனும் வர்த்தினியும் அவலாஞ்சிக்கு பயணம் சென்று இரண்டு நாட்கள் ஆகியிருந்தது.

தினமும் காலையில் அவனுக்கு இரவில் தேவைப்படும் தீப்பந்தத்திற்குரிய துணியை சுற்றிக் கொடுத்து விட்டு மிருகங்களின் நடமாட்டம் ஏதாவது தென்படுகிறதா என்று தன்னுடைய கூர் கண்களால் ஒருமுறை அந்தப் பகுதியை நோட்டமிட்டு செல்வார் திண்ணன்.

"யோவ் பெர்சு.... நாங்க இன்னும் ரெண்டுநா எல்லாம் இங்க தங்கல. இன்னிக்கே கெளம்புறோம். ராத்திரியாச்சுன்னா இங்க குளிரும், இருட்டும் சேந்துக்கிட்டு ஆளப் போட்டுத் தள்ளிரும் போலருக்குதுய்யா! வர்த்தினியும் பழக்கமில்லாத இந்த எடத்துல இருக்க பயந்துக்கிட்டு ஒன்னைய ஒண்டிக்கிட்டு வந்து படுத்துக்குது!" என்று சொன்னவனைப் பார்த்து புன்னகைத்த படி வதனி தன்னுடைய உடையை மாற்ற மறைப்புக்குள் சென்றாள்.

"அதுக்குத் தானடா இங்க வந்த? என்னவோ புள்ள ஒங்கிட்ட ஒண்டிக்கிட்டு வர்றது புடிக்காத மாதிரியில்ல பேசுறவே?" என்று மென்குரலில் கேட்டவர் தன்னுடைய காரை படிந்த பற்களை ஜெயனிடம் காட்டி வைத்தார்.

"யோவ்.... நா ஒங்கிட்ட என்னத்த சொல்லிக்கிட்டு இருக்கேன்? நீ இந்நேரத்துல எடக்கு பேசிக்கிட்டு?" என்று சலித்தவனிடம்,

"எலே...ய்! இன்னிக்குலா மிருகம் எதுவும் எறங்கி வராதுடா கொமரா..... தைரியமாயிரு! அப்டியே நரி, கரடின்னு ஏதாச்சு ஒண்ணு ரெண்டு சுத்துச்சுன்னாலும் நெருப்பேத்தி வச்சுருக்குறத பாத்துட்டு குடிச பக்கம் வராம ஓடிரும்!"

"நீதா அஞ்சாத சிங்கமாச்சுல்லடே.... ஒன்னியும் ஒம்பொண்டாட்டியவும் காப்பாத்திக்கிடுற வலுவில்ல ஒஒடம்புல?" என்று கேட்டவரிடம்,

"ஆமா..... வலு தான? அது எக்கச்சக்கமா கொட்டிக் கெடக்குது ஒடம்புல! யான வந்து எறங்குச்சுன்னா, அது காதப்புடிச்சு கரகரன்னு சுத்தி விடுறேன்..... போய்யா அங்கிட்டு! ஊருக்குள்ள ஆளும் பேருமா இருந்தா தான் நமக்கெல்லாம் லவ்ஸூ கூட ஒழுங்கா வருது!" என்று சொன்னவனுக்கும் திண்ணனுக்கும் குளித்து முடித்து வந்தவள் வரக்காப்பியை போட்டு வந்து கொடுத்திருந்தாள்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now